
எனக்கு அவரின் எழுத்துக்கள் பரிச்சயமானபோது நான் கிராமத்திலிருந்து பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கல்விபயிலும் ஒரு சாதாரணமாணவன்.. மற்றவர்களைப்போல அவரது கதைகள், தொடர்கதைகள் மூலம் ஏற்பட்டதல்ல இந்த அறிமுகம்.. என் தந்தை அவரது தொடருக்காக டவுனிலிருந்து வரும் பஸ்ஸில் ஒரு பத்திரைகையை தருவித்திருந்தார்... தினமணி என்று ஞாபகம்.. அதில் சிலிக்கன் சில்லுப்புரட்சி என்ற தொடர் என்றும் ஞாபகம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் முன் என்று ஞாபகம்.. அதில் அவர் எழுதியது கணினி பற்றிய என் சிந்தனைக்கு அச்சாரம் என்றால் மிகையில்லை. அவரின் பாதிப்பால் தான் முதன்முதலில் தந்தையிடம் விரும்பிக்கேட்டு ஒரு கேசியோ எப்.எக்ஸ்.82 என்ற சையின்டிபிக் கால்குலேட்டரை முதன்முதலில் தேவையே இல்லாது இருந்தபோதும் வாங்கினேன் என்றால் அது மிகையல்ல.. அதன்பின்பு விக்ரம் தொடர், என் இனிய இயந்திரா என்று என்று அவரின் விஞ்ஞானம் கலந்த எழுத்துக்களில் மனதைப்பறிகொடுத்த அந்த காலங்களை நினைக்கும்பொழுது.. இன்று அவர் இல்லை என்று நினைக்கும்பொழுது... ஏதோ ஒரு ஓரத்தில் நிச்சயம் வலிக்கவே செய்கிறது... ஒரு சொட்டுக்கண்ணீர் என்னைக் கேட்காமலே வழிந்தோடுகிறது... உன் அறிவியல் எழுத்துக்கள் நிச்சயம் காலம்கடந்து உயிர்வாழும்...
சென்று வா நண்பா.. நாங்கள் அறிந்திராத உலகிற்கு.. தமிழ் இலக்கிய உலகில் நீயும் ஒரு சகாப்தமே.. ஆயிரம் விமர்சனங்கள் எனக்குள் இருந்தாலும்...
அஞ்சலிகளுடன்...





9 பின்னூட்டங்கள்:
good one.
we loss great writer in tamil
சென்று வா நண்பா.. நாங்கள் அறிந்திராத உலகிற்கு.. தமிழ் இலக்கிய உலகில் நீயும் ஒரு சகாப்தமே.. ஆயிரம் விமர்சனங்கள் எனக்குள் இருந்தாலும்...
அஞ்சலிகளுடன்...
உண்மையான வரிகள். எதிரியின் மரணமாக இருந்தாலும் மனிதாபிமானத்துடன் பார்ப்பவன் சிந்தனை குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பதில்லை.
அருமையான பதிவு. இந்த பதிவு TBCD, ஸ்டாலின் போன்ற பதிவர்களுக்கு நல்ல பாடம்.முதிர்ந்த பதிவர் என்பதை நிருபித்து விட்டீர்.
இளைஞர்களின் மனதை தன் பேனாவினால் கட்டிப்போட்ட கனேஷ் வசந்த் படைப்பாளி சுஜாத்தாவிற்கு. என் ஒரு சொட்டுக்கண்ணீரும் காணிக்கை..
//அருமையான பதிவு. இந்த பதிவு TBCD, ஸ்டாலின் போன்ற பதிவர்களுக்கு நல்ல பாடம்.முதிர்ந்த பதிவர் என்பதை நிருபித்து விட்டீர்//
நான் யாருக்கும் எதிராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதவில்லை. சிவாஜி பற்றிய என் விமர்சனம் குமுதம் மூலம் பல லட்சம் மக்கள் அறிந்ததுதானே. மற்றபடி அவரது சாதனைகள்.. சாதனைகள் தானே! மேலும் எனக்கு தளைகள் கிடையாது என்பது அனைவரும் அறிந்தது. சுஜாதாவின் பாதிப்போடு இவர்களின் பாதிப்பையெல்லாம், படைப்புகளையெல்லாம் ஒப்பிடும் அளவுக்கு இவர்கள் இன்னும் சாதிக்கவில்லை. பார்ப்போம் எதிர்காலம் என்ன செய்யுமென்று. என்னைப்பொருத்தவரை நான்காம் தமிழை எனக்கு ஊட்டியவர் சுஜாதா தான். இதை மறப்பதோ மறுப்பதோ அனாவசியம்!
தோழர் விடாது கருப்பு அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பெரியார் பற்றியோ உங்களுக்குள் இருக்கும் தோழர்கள் பிரச்சனைப் பற்றியோ பேசவிரும்பவில்லை. ஆனால் என்னையும், என்னுடைய அம்மாவைப் பற்றி செந்தழல் ரவியுடன், ஓசை செல்லாவுடன் பேசுவதை நிறுத்திவிடவும்.
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். மீண்டும் என் அம்மாவை இணைத்து செந்தழல் ரவியுடன் பேசினால்...
http://karuppupaiyan.blogspot.com/2008/02/blog-post_547.html
வாசகர்களுக்கும், அன்பர்களுக்கும் பெரும் இழப்பு. அவரின் இடத்தை நிறப்ப வேறு யாரும் இல்லை. முடியாது.
இரு முறை நேரில் சந்தித்து உரையாடினேன். (மெரினா பீச்சில்) ; ஒரு புத்தகம் பரிசளித்தேன் ; (முச்சந்தி இலக்கியம்) மிகவும் மகிழ்ந்தார் ; சில் ஆண்டுகளாக, வார வாரம் சனிக்கிழமை காலை அம்பலம்.காமில் அவருடன் பல மணி நேரங்கள் பல பல விசியங்கள் குறித்த சாட். அருமையான நினைவுகள்.
அவரின் முழு எழுத்தக்குகளையும் படிக்காமல், சினிமா வசனங்கள், க்ரைம் திரல்லர்கள் மட்டும் படித்து அதன் பாலியல் வர்ணனைகளை மட்டுமே குறை சொல்லும் வாசகர்கள், அவரது non-ficiton கட்டுரைகள், புதுக்கவிததை, சங்க இலக்கியம் அறிமுகங்கல், விஞ்ஞான தொடர்கள் மற்றும் பல நூறு ஆக்கங்களை அனைத்தையும் படித்தால் தான் அவரது வீச்சும், ஆழமும் புரியும். பலருக்கும் பல அருமையான, புதுமையான் விசியங்களை, புத்தகங்களை, எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
a versatile genius indeed.
-----------------
*சுஜாதாவுக்கு நன்றி சொல்வோம்- கமல்:
*
கமல் வெளியிட்டுள்ள செய்தியில், சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் அறிந்தே இருந்தேன். அவரும்தான்.
வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும்
நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள் சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார்.
அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்தது போல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கை முறை, நெறி அது.
விஞ்ஞானமும் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலாகவே நினைத்தார். அதனால் தான் அவருக்கு தன் எழுத்தைதப் பற்றி செறுக்கு இல்லை.
அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவு செய்து யாரும் சுஜாதாவை கணித்து
விடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காவும், நட்புக்காகவும்
அன்புக்காகவும் அவர் செய்து கொண்ட சமரசம்.
இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக் காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டும் என்றால் நன்றி சொல்லிக் கொள்ளலாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.
தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவது போல், கொடுக்கும்
இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது, சுஜாதா
இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதை விட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.
பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்பொழுது, ஏதோ குறுகிய வட்டம் போல ஆகியது.
தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
*நன்றி: **www.thatstamil.com*
அறிவியல்தமிழின் வளர்ச்சியில்
சுஜாதாவிற்கும் பங்கு உண்டு....
அஞ்சலிகள்.....
Post a Comment