எமது பிற தளங்கள்!

Osai Chella's Voice Blog Soothing Tamil Melodies My Photography Blog

உதவிதேவை: ப்ராஜக்ட் தமிழ் ரெடி - 1000 கணினிகளில் தமிழ்!

வலைப்பதிவர் பட்டறைகளை அடுத்த கட்டத்துக்கு செலுத்தும் செயல்நோக்கோடு பதிவர் முக்குந்த், மாசிவா ஒத்துழைப்போடு இந்த அடுத்த கட்டத்தில் நுழைய உங்கள் ஒத்துழைப்பு தேவை! தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் பலரும் உபயோகபடுத்தும் இணைய மேய்வகங்களிலும் (பிரவுசிங் சென்டர் தானுங்க.. இதுக்கும் தமிழறிஞர்கள் கண்டனம் சொல்லுவாங்களா?! :-P ) சென்று அவர்களுடைய கணினிகளை தமிழ் ரெடியாக மாற்றுவது தானுங்கோ! முதலில் முக்குந்த் அவர்கள் கோவையில் ஒரு சில இணைய மேய்வகங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளார். சென்னையில் மாசிவகுமார் இந்த திட்டத்தை ஒருங்கிணைக்கவுள்ளார். புதுவையில் இரா சுகுமாறன் அவர்களும் ஒருங்கிணைக்க உள்ளார்கள். மற்ற ஊர்களில் இதை செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்னையோ அல்லது மேற்குறிப்பிட்ட நண்பர்களையோ தொடர்புகொள்ளலாம். மேலதிகத் தகவல்கள்/ விபரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும்!

உதவி தேவை:
1. 1000 தமிழ் ரெடி ஸ்டிக்கர்கள்
2. 100 தமிழ்க் கணினி மென்பொருட்கள் அடங்கிய குறுவட்டுக்கள்
3. 100 A3 அளவு கலர் போஸ்டர்கள்
4. 200 சான்றிதழ்கள்

கீழ்கண்ட நகரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தேவை

1. சேலம்
2. மதுரை
3. நெல்லை
4. திருச்சி
5. சிங்கை, மலேசியா, மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் நகரங்கள்

புரவலர்கள் (Donors of Money OR any of the above materials), செயல் ஆர்வலர்கள் (Volunteers) பின்னூட்டமிடுங்கள். உங்கள் வாழ்த்துக்கள் கூட எங்களை ஊக்கப்படுத்தும் அல்லவா!

post signature


23 பின்னூட்டங்கள்:

Kasi Arumugam - காசி said...

sticker : kasi

ஜாலிஜம்பர் said...

இணைய மையங்களில் தமிழை அறிமுகப்படுத்துவது மிகவும் நல்ல ஒரு முயற்சி. வருகின்ற மதுரைப்பட்டறையிலேயே இதை முக்கியமான திட்டமாக செயல்படுத்தலாம்.

பிரேம்குமார் said...

வாழ்த்துக்கள்

(தமிழ் ஆர்வலர்கள் ப்ராஜெக்ட்டுக்கு தழிலேயே பெயர் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்)

அறிவன் /#11802717200764379909/ said...

வாழ்த்துக்கள்.
இணையப் மேய்வகங்கள் எனச் சொல்வதை விட,இணைய உலாவகம் அல்லது இணையப்பூங்கா என்பது நன்றாக இருக்கும்.
சிங்கை போன்ற இடங்களில் பொதுஇணைய நிலையங்கள் மிகக் குறைவு...
இதோடு கூட வெளிவரும் கணிப்பொறியின் விசைபலகைகளில் தமிழ் எழுத்துக்களையும் கொண்டுவந்தால் அது பயனாளர்கள் இயல்பாகவே தமிழைத் தேடும் விழைவைத் தரும்.

ஆழியூரான். said...

Definantley i will do participate to this campaign, what can i do from my platform.

புரட்சி தமிழன் said...

நல்ல முயர்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் சிறப்பாக செய்யுங்கள்.

மாசிலா said...

நல்ல திட்டம்.

நல்லபடி செயல்பட வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.

நன்றி.

OSAI Chella said...

நன்றி காசி அண்ணா அவர்களே... முதல் தேவை உங்களால் தானே சாத்தியப்பட்டது!!

(பல அர்த்தங்களில் சொல்கிறேன்)

பாரி.அரசு said...

கணினி விசைபலகைக்கான தமிழ்99 ஓட்டிகள்(stickers) (தமிழ் மற்றும் ஆங்கிலம்) என்னிடமுள்ளது. தேவையெனில் மின்னஞ்சல் செய்யவும்.

covai sibi said...

yes. i will help.

OSAI Chella said...

பிரேம் பெயரில் இருமொழிக்கொள்கை..! செயலில் தான் தமிழ்!

அறிவன்.. உலாவகம் நன்றாக உள்ளது! நன்றி!

ஜாலி ஜம்பர் - செய்யலாமே மதுரையிலும்! யாராவது ஒருங்கிணையுங்களேன்!

ஆழியூரான்... நன்றி. முதல் நிகழ்வு முடிந்ததும் படத்துடன் சொல்கிறேன்!

புரட்சித்தமிழன், மாசிலா.. வாழ்த்துக்களுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

செல்லா தம்பி!
வாழ்த்துக்கள்!

Thamizachi said...

வாழ்த்துக்கள்

அரியாங்குப்பத்தார் said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

தமிழர்களுக்காக... தமிழுக்காக... தொடங்கப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது நல்லது...

இணைய உலாவகம், இணையப்பூங்கா என்பது நன்றாகத்தான் உள்ளது அறிவனின் வேண்டுகோளை கவனத்தில் கொள்ளவும்...

Kasi Arumugam - காசி said...

செல்லா, எல்லாம் தயாரானதும் 3 நாள் அவகாசம் கொடுங்க, ஸ்டிக்கருக்கு நான் பொறுப்பு.

('காசி'ன்னு தள்ளி நின்னு சொல்லுங்க, 'காசி அண்ணா'ன்னு கையைப்பிடிச்சு சொல்லுங்க, அட, 'காசி அவர்களே'ன்னு கைகூப்பியாவது சொல்லுங்க, ஆனா 'காசி அண்ணா அவர்களே'ன்னு சொல்லிக் குழப்பாதீங்க:-))

OSAI Chella said...

காசி அண்ணா,,, எல்லாம் மைக் பிடிச்ச பழக்கம். கூடவே இந்த "அவர்களே" தொத்திக்கொண்டு விடுகிறது! அரசியல் வியாதி போல!

சிறில் அலெக்ஸ் said...

இங்க சிகாகோவுக்கு ஒரு காப்பி (சி.டி) அனுப்புங்க. நூறு காப்பி போட்டு கடைகளில் கோவிலில் விநியோகம் செய்துடலாம்.

சீரீயசா... இது குறித்து மடல் அனுப்புறேன்

இசை said...

செல்லாக் கருத்துக்களை சொல்லும் செல்லா என தங்கள் மீது சற்று வருத்தம் இருந்தது. ஆனால் இப்போது நீர் செயல்வீரர் செல்லா... இது தொடர வேண்டும். எங்கள் ஊரிலும் இதை செயல்படுத்த நான் தயார். பதிவர் பட்டறையில் நான் கலந்துகொள்ளவில்லை எனவே.. கணித்தமிழ் திட்டவிவரணை (சிறு குறிப்பு) கொடுத்தீர்கள் என்றால் விரைந்துமுடிக்க ஏதுவாக இருக்கும். எங்கள் ஊரில் ஒரு 5 உலாவகங்கள் இருக்கலாம். கல்லூரிகளில் அடுத்தபடியாக இத்திட்டங்களை கொண்டுசெல்லலாம். பெரும்பாலான மாணவர்களுக்கு கணிணி இன்னமும் ஆங்கில பண்டமாகவே காட்சியளிக்கிறது. மற்ற விவரங்களை மின்னஞ்சல் செய்கிறேன் உங்களுக்கு.

Anonymous said...

vaazthukkal!

oru vasaki

மணியன் said...

சிறப்பான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !

வெங்கடேஷ் said...

வாழ்த்துக்கள்.

போஸ்டர் செய்யும் செலவை நான் ஏற்கிறேன். எங்கே எப்போது என்று குறிப்பிடவும்.

வெங்கடேஷ்
http://www.thiratti.com

இளைய கவி said...

செல்லா அவர்களே,

திருச்சியில் உள்ள browsing center களில் project ஐ பரப்ப நான் ரெடி.
neelabkrish@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்

இளைய கவி

Jothivel Moorthi.AC said...

Dear Chella!

Mugunth spoke to me this morning regarding project thamizh. Quite intresting. Eppo nu sollunga.. kalathula namum sernthukalam.

Anbudan - Jothivel moorthi.AC

எனது முந்தைய பதிவுகளை படித்துவிட்டீர்களா?!

First Time Visitor!?

You can read my Prev Posts HERE

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு