எனது சமீபத்திய 5 பதிவுகள் இவை..

வலைப்பூவுலகில்முதல் முறையாக: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருட்டிணசாமியின் காரசாரப் பேட்டி - பகுதி 1

இவர் யார்? இவரைப்பற்றிய வரலாறு பலருக்கும் தெரியவில்லை வலையுலகில். தமிழகத்தின் இன்னொரு அம்பேத்கார் என்று பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவர் ஏதோ திடீரென்று அரசியலுக்கு வந்தவர் அல்ல. அவர் சந்தித்த போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. படிப்பில் மருத்துவர்! அடித்தால் திருப்பியடி என்று 90களில் தமிழக தலித் வரலாற்றில் முதன்முறையாக சமூகத்தளங்களில் தலித்துகள் புரட்சியை முன்னின்று நடத்தியவர். நக்சலிசத்தின் கொள்கைகள் இவருக்கு அத்துபடி என்று பலமுகங்கள் கொண்டவர். மிசாவில் கைதாகி 9 மாதங்களை சிறையில் கழித்தவர் என்ற நீண்ட அரசியல் வரலாற்றுக்கு சொந்தக்காரர். அவரின் காரசாரமான ஆடியோ பேட்டி ....

powered by ODEO

post signature

பி.கு: தலித், நடுசாதிகள், அரசியல் கட்சிகளின் நிலைபாடு, ஈழப்பிரச்சினை என்று அருமையாக அனைத்து விசயங்களுக்கும் பதிலளித்திருக்கிறார். கேள்விகள் பலவற்றையும் அனுப்பி உதவி செய்த பதிவர் குழலி, தலித் அரசியல்எழுச்சி பற்றி எனக்கு வீட்டுப்பாடம் நடத்திய எழுத்தாளர் பாமரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிற்கு உதவிய தோழர் பாவேந்தன், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பூசாகோ கலை அறிவியல் கல்லூரி, ஆங்கிலத் துறை பேராசிரியர் டாக்டர் ரமணி, ஆகியோருக்கு என் நன்றிகள் பல! நமது பதிவர்களின் பின்னூட்டக் கேள்விகளுக்கு அவசியம் பதிலளிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்! ( தொடர்ச்சி.. திங்கள் அன்று )

For those who can not listen to audio can read his rediff interview to know this important Political Leader of Tamilnadu (Dalit) Politics!

19 பின்னூட்டங்கள்:

லக்கிலுக் said...

என்னை போன்றவர்களுக்கு ஆடியோ கேட்கும் வசதியில்லை. பதிவாக போடமுடியுமா?

Anonymous said...

ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தப்ப முதல் முதல்ல வந்து மேடையில் உட்கார்ந்து ஆதரவு தந்தவர்!

தலித் நண்பன் said...

திராவிட இயக்கங்கள் பற்றிய தலித்திய பார்வையை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. தொடர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

குழலி / Kuzhali said...

செல்லா பேட்டிக்கு மிக்க நன்றி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அவர்கள் கூட்டங்கள் தான் முதன் முதலில் அரசியல் என்ன என்பதையே எமக்கு உணர்த்தியது, அந்த கூட்டங்களுக்கு பிறகு தான் வெகுசன ஊடக பாதிப்பினால் பாஜக விற்கு ஆதரவாக பீறிட்டுக்கொண்டிருந்த தேசபக்தி டபக்கென்று அமுங்கி போனது மட்டுமல்லாமல் எது அரசியல் என்பதும் அதை தொடர்ந்து தொல்.திருமா அவர்களின் கூட்டங்கள், பேச்சுகள் அதன் பிறகு தேடி தேடி படிக்க ஆரம்பித்தவைகள் என 95-98களில் இருந்த அரசியல் பார்வைகள் முற்றாக மாறிப்போய்விட்டது....

மற்றைய விபரங்களையும் கேட்க ஆவலாக உள்ளேன்....

நன்றி

Anonymous said...

திராவிட இயக்கங்களை இப்படிப் போட்டு தாக்கியிருக்கார் செல்லா?

bharath said...

அருமையான முயற்ச்சி.. ஆரம்பமே செம சூடா இருக்கு.. waiting for the other parts..
chella, கொஞ்சம் செந்தமிழ்ல பேசி கஷ்டப்படாம(கஷ்டபடுத்தாம) இயல்பா பேசினால் மிக நன்றாக இருக்கும்.

//தமிழகத்தின் இன்னொரு அம்பேத்கார் என்று பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். //
இந்த வரி கொஞ்சம் ஓவர் ;-)

OSAI Chella said...

//தமிழகத்தின் இன்னொரு அம்பேத்கார் என்று பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
இந்த வரி கொஞ்சம் ஓவர் ;-)//

தல... உங்களுக்கு வேண்டுமானா ஓவர்! அம்பேத்காரே யாருன்னு தெரியாம எம்ஜிஆருக்கு அப்புறம் இவரைத்தலைவராக ஏற்றுக்கொண்ட பல தலித் இயக்கத்தோழர்கள் எனக்கு தெரியும். உண்மைகள் அப்படித்தான்!

Anonymous said...

செல்லா இவர் தனிப்பட்ட முறையில் ஒரு ரஜினி ரசிகர் என்பது உங்களுக்கு தெரியுமா?

ராசபாண்டி said...

தலித்துகள் முன்னேறக்கூடாது என்பதற்க்காக இட ஒதுக்கீட்டை நடுசாதியினர் எதிர்த்தார்களா? அதுவும் இன்குலாப் போன்றவர்கள். அதிர்ச்சிகரமான தகவல்:-(

OSAI Chella said...

// லக்கிலுக் said...

என்னை போன்றவர்களுக்கு ஆடியோ கேட்கும் வசதியில்லை. பதிவாக போடமுடியுமா?//

லக்கி, நம்பளுக்கு தமிழ் அடிக்க வராதுன்னுதானே நாளுவரியில நச்சுன்னு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்! இது பல பக்கங்கள் வரக்கூடிய விசயம்! நண்பர்கள் யாரவ்து தமிழில் வேகமாக அடித்து உதவினால் நலமாக இருக்கும். கேட்டுப் பார்க்கிறேன்!

OSAI Chella said...

///செல்லா இவர் தனிப்பட்ட முறையில் ஒரு ரஜினி ரசிகர் என்பது உங்களுக்கு தெரியுமா?//
அவரின் தனிப்பட்ட விருப்பங்களைப் பற்றி நான் கேட்கவில்லை. எனக்கும் தெரியாது!

தமிழ்பித்தன் said...

என்னை போன்றவர்களுக்கு ஆடியோ கேட்கும் வசதியில்லை. பதிவாக போடமுடியுமா?///
ஒரு வேளை லக்கி லுக்கு அண்ணைக்கு ஸ்பீக்கர் ரண்டும் அவுட்டோ தெரியாது. இதை நாசுக்காக சொல்லக்கூடும். உடனே இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடுகிறேன்
சீ..சீ.. இந்த இலங்கைச் செய்தியள் அடிக்கடி கேட்டதால வந்த வினை!
உங்களை மாதிரி அவரும் நஞ்சென்று சுருக்கமாக விளங்கக் கூடியவாறு பதில் தாராறே!

thalith rasikan said...

super kalakkal interview. thanks chella for bringing this leader to the alternative media

Anonymous said...

இவர் யார்? இவரைப்பற்றிய வரலாறு பலருக்கும் தெரியவில்லை வலையுலகில்.

Dalit politics has been discussed in blogs. If you dont know that
blame is with you. Many bloggers
need no introduction about him.

OSAI Chella said...

// ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தப்ப முதல் முதல்ல வந்து மேடையில் உட்கார்ந்து ஆதரவு தந்தவர்! //
appadiyaa

OSAI Chella said...

Arumaiyaana Paetti - narasimhan ( his comment is deleted accidently! - OSai Chella

OSAI Chella said...

//Dalit politics has been discussed in blogs. If you dont know that
blame is with you. Many bloggers
need no introduction about him.//

Only afew mentioning is not enough for the Dalit Movement!

Anonymous said...

//Dalit Movement!//

தலித் இயக்கங்கள் ஏன் தனது எதிரிகளிடமே சரணடைந்தது?

திருமா போன்றவர்கள் பா.ம.க வுடனும் ஒரு கட்டத்தில் பிஜேபியிடமும் கூட கூட்டனி வைத்துக் கொண்டது ஏன்?

கிருஷ்ணசாமியும் கூட தி.மு.க அதிமுக இருண்டுடனும் கூட்டு வைத்திருக்கிறார்.. காங்கிரஸ்சிடம் கூட்டு வைத்திருக்கிறார்..

முதலில் தலித் விடுதலை என்பது என்ன? அவர்கள் இப்போது சமூகரீதியாக மட்டும் தான் ஒடுக்கப்படுகிறார்களா? நான் அதையும் தாண்டி பொருளாதார ரீதியிலும் சுரண்டப்படுகிறார்கள் என்கிறேன்.. இவர்களுக்கான பொருளாதார விடுதலைக்கு இவ்வியக்கங்களிடம் உள்ள திட்டம் என்ன?

நான் பார்த்த தலித் இயக்கங்கள் எல்லாமே உண்மையான நோயை மறைத்து விட்டு அதன் வெளிப்பாட்டை மட்டுமே புணுகு பூசும் வேலை செய்து வருகின்றன. மெய்யாகவே தலித் விடுதலை என்பது நிலத்தின் மேலான அவர்களுடைய உரிமை நிலைநாட்டப்படுவதில் இருந்து தான் துவங்கும் என்பது எனது புரிதல்..
நிலம் மற்றும் நிறுவனங்கள் கூட்டு உடமையாவதில் இருந்து தான் சரியான சமூக நீதி பரவும்.. இதை மறுதலிக்கும் எந்த தலித் இயக்கமும் பரிதாபத்திற்குரிய வகையில் தோல்வியில் தான் முடியும்.

கிராமங்களில் இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து நடக்கும் கிளர்ச்சிகளை ஆதிக்க சாதியினர் ஒடுக்கும் முறையை கவனித்தாலே நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.. எங்கே கிளர்ச்சி நடக்கிறதோ அங்கெல்லாம் அதை அந்த எழுச்சியை ஒடுக்க ஆதிக்க சாதியினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு தலித்துகளுக்கு தங்கள் வயல்களில் வேலை கொடுக்க மறுக்கிறார்கள். தலித் இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களும் அடையாள அளவில் தான் இருக்கிறது.

Boston Bala said...

தொடரவும்... நன்றி

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு