எனது சமீபத்திய 5 பதிவுகள் இவை..

ரமணீதரன் அய்யா மற்றும் அனைத்து வலைப்பதிவர் சமூகத்துக்கும்.... எனது இறுதிமடல்

திராவிட வேங்கை மூர்த்தி என்ற விடாதுகருப்பால் தலித் கம்மனாட்டி என்று பாராட்டப்பட்ட ஓசை செல்லாவின் வணக்கமுங்க...

டோண்டு பத்தி உங்க கருத்துக்களை குழலி பதிவில் படிச்சேனுங்க.. அவரு டோண்டு காந்திங்க.. ஒரு போராட்டத்தை எப்ப ஆரம்பிப்பாரு எப்ப முடிப்பாருன்னு அவருக்கே தெரியாதுங்க... நேர்மையின் சிகரமுங்க... உங்க தயக்கம் புரியுதுங்க..

ஆனாலும் சில விசயங்கள் மனசை நெருடியதால் இங்கன சொல்லிடறனுங்க..

உளவியல் கூறுகளை அறிந்தவர்கள் யாவரும் சடோ மசோகிஸ காம்பினேசனை பிரிக்கமுடியாது என்று அறிவார்கள். இதை என்னை வலையுலகிற்கு இழுத்துவந்த திரு டோண்டு மிக மிக அழகாக பார்ப்பணீயச் சூழ்ச்சிக்கூறுகளோடு (இப்ப எவன் அழுதான் இஸ்ரேல் ஜெர்மனியை பத்தி, இப்ப எழுத்து இந்த ஜன்மம்.. ச்டாசியைப் பற்றி எழுதும் பின்னூட்டத்தை மட்டும் அலவ் பண்ணுமாம் இந்த சைக்கோ) பதிவுகள் போட்டுவருவதை நடுநிலைமையாளர்கள் புரிந்து கொள்வார்கள். மேலும் இவரை நீக்கவேண்டுமா என்று நாங்கள் எங்கள் முடிவைத் தீர்க்கமாக சொல்லி விட்டோம். மேலே ஒரு வாசகர் கூறியது போல தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி போன்ற திரட்டிகள் தங்கள் சுதந்திரம் பற்றியும் யோசிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதாகவே கருதுகிறேன். காரணம் இணைய சுதந்திரம் வேறு தந்திரம் வேறு அராஜகம் வேறு. மற்றபடி முடிவே எடுக்காமலும் இருக்க உங்களுக்கு உரிமையுள்ளது என்பதை நான் அறிவேன். இன்னும் சொன்னால் மூர்த்தி மூடசைக்கோ, எளிதில் மாட்டிக்கொள்வான் .

ஆனால் தன்னை வருத்துவதையே சுகம்/சாதனை என்று கருதும் ஒரு மசோகிஸ்ட்டை அவ்வளவு சீக்கிரம் தண்டிக்க முடியாது என்று காந்தியை உதாரணம் காட்டி ஓசோ தைரியமாக எழுதியதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் நான் ஏன் காந்தியைக் கொன்றேன் என்ற கோட்சே யின் பதில்களால் அந்த நீதிபதியே ஆடிப்போனார் என்று நான் எழுதிய ஒரு ஆங்கிலப்பதிவின் சுட்டியை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

கடைசியா ஒரு விசயமுங்க,எனக்கும் மூர்த்திக்கும் முட்டிக்கிட்டதுக்கு அந்த புறம்போக்கு என்னை தலித் கம்மனாட்டின்னு ஒரு நூறு முறையாவது சொல்லியிருப்பானுங்க.எங்கிட்ட ஆதாரம் இருக்குங்க. அப்புறம் தான் யோசிச்சு சாக்கடைல பன்னி வேட்டைக்கு இறங்குனமுங்க. நாங்க என்னங்க பூணூல் போட்ட ஆசாரியா.. இல்லை வடகல ஐயங்கரா.. சாக்கடை தானுங்களே எங்க வாழ்வாதாரம். இவனுக கழியரத கையாலள்ளித்தேனுங்க இவனுகளை புனித ஆத்மாக்களா அலையவிட்டோம் காலங்காலமா. இந்த மகான் காந்திகூட எங்களை அரிஜன் நு சொல்லியே ஹரியின் மக்களை திருப்பதியிலயும் ஸ்ரீரங்கத்துலயும் கர்ப்பக்கிரகத்துக்கா கொண்டுபோய் விட்டார் நல்ல வேலை பாக்க.. இல்லங்களே... இன்னைக்கும் சாக்கடை அடைச்சிக்கிட்டா அரடவுசரோடு குவாட்டர் அடிச்சுக்கிட்டி உள்ள இறங்கி இந்த பூணூல்களா சாகுதுங்க.

பரவாயில்லங்க.. நீங்கல்லாம் பெரிய மனுசருங்க, நீதி நியாயம் அறிஞ்சவருங்கோ.. இந்த தலித் கம்மனாட்டிக்கு ஒண்ணுமே புரியலைன்னாலும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியுமுங்கோ... பூணூலஎதித்து ஞாயம் கேட்டா சுப்ரீம் கோர்ட்டே கூட அவ்வளவு சீக்கிரம் நீதி சொல்லி வெளிச்சங்காட்டாதுங்க.. எல்லாம் சொன்னாங்க நான் விளம்பரத்துக்கு தேன் எழுதனன்னு. உண்மைதானுங்க, பூணூல விட நாணும் அதுலயும் திறமைசாலின்னு ஒரு அய்யங்காருக்கு புரூவ் பண்ணத்தானுங்க. சாதிச்சனுங்க. ஆனா அதுக்கும் மேல மனசுன்னு ஒண்ணு இருக்குங்க, சுயமரியாதன்னு ஒண்ணு இருக்குங்க.

ஆனா இன்னையிலிருந்து நான் சாக்கடையில்ல பீயள்ளத்தான் லாயக்குன்னு புரிஞ்சு போயி இனிமேல் தமிழ் வலைப்பதிவுலஎழுதறதுக்கே முற்றுப்புள்ளி வச்சுட்டனுங்க.. ஏனோ தெரியலைங்க.. இந்த வரி அடிக்கிறப்ப என் கண்ணுல இருந்து ரெண்டுதுளி கண்ணீர் என்னை பெத்த அம்மா மேல சத்தியமா வந்துடுச்சுங்க.. இனிமேல் உங்க வீடுகள்ள (சத்தியமா வலைப்பூக்களைச் சொல்லலங்க) ஏதாவது சாக்கடை கக்கூசு அடைச்சுக்கிடா இந்த கம்மனாட்டி செல்லாவுக்கு எல்லா திராவிட / பூணூல் வலை பதியர மகராசனுகங்களும் 99946 22423 க்கு கூப்பிட்டு சொல்லுங்க.

(தயவு செய்து இன்னும் கொஞ்ச நேரம் யாரும் எங்கிட்ட பேசவேண்டாம. அழுவதற்கு எனக்கு சுதந்திரம் இல்லையா என்ன)

கண்ணீருடன் விடைபெறும்
கம்மனாட்டி ஓசை செல்லா

21 பின்னூட்டங்கள்:

OSAI Chella said...

சாக்கடையில் இறங்கி தமிழ் வலைப்பதிவை சுத்தம் செய்யும் முயற்சியில் ஒரு தலித் கம்மனாட்டி இறந்துட்டான்னு வச்சுக்கிங்க. இது ஒரு பெரிய விசயமா மீடியாவுல.

லக்கிலுக் said...

//இனிமேல் தமிழ் வலைப்பதிவுலஎழுதறதுக்கே முற்றுப்புள்ளி வச்சுட்டனுங்க..//

இந்த வரிகளுக்கு எனது கடுமையான கண்டனங்கள்!!!

Ramani said...

/'""ரமணீதரன் ..../

??
இது எனக்குத்தான் என்றால், இந்தப்பிரச்சனைக்குள் நானெங்கே வந்தேன்? :-(

இதிலே என் பெயர் எதற்கு வரூகிறதென்று கொஞ்சம் புரியும்படியாகச் சொன்னால், என்னவென்றேனும் புரிந்துகொள்வேனே?
:-((
குழப்பமே எனக்கு மிஞ்சுகிறது.

OSAI Chella said...

// Ramani said...

/'""ரமணீதரன் ..../

??
இது எனக்குத்தான் என்றால், இந்தப்பிரச்சனைக்குள் நானெங்கே வந்தேன்? :-(

இதிலே என் பெயர் எதற்கு வரூகிறதென்று கொஞ்சம் புரியும்படியாகச் சொன்னால், என்னவென்றேனும் புரிந்துகொள்வேனே?
:-((
குழப்பமே எனக்கு மிஞ்சுகிறது. //

Dear Ramani Read your comment

கோவி.கண்ணன் said...

செல்லா,

எதையும் பட்டென்று போட்டு உடைப்பவர் என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், மனதில் வைத்துக் கொள்ளாத வெளிப்படையானவர் தான் என்று உங்களைப் படித்துவருகிறேன்.

நீங்கள் பலரை விமர்சிக்கும் உரிமையை கையில் எடுத்துக்கொள்ளும் போது அடுத்தவர் ஏன் அந்த உரிமையை கொண்டு உங்களை விமர்சிக்க எடுத்துக் கொள்ளக் கூடாது ?

நண்பர்களிடம் பாராட்டுப் பெறுவதும் கூட கேட்காமல் கிடைப்பது தானே.
:)

ஒருவரை 'பாப்பானே' என்று விளிப்பது கூட இழிவு சொல் ஆகிவிட்டது என்று புரிந்தால் சரி.
நீங்கள் வேண்டுமானால் ஒரு பிராமணரை 'பாப்பான்' என்று சொல்லிப் பாருங்க நிச்சயம் கோவப்படுவாங்க.

செல்லா இதை பொதுவான கருத்தாகத்தான் சொன்னேன். வேறு எதையும் தொடர்பு படுத்தியோ, அல்லது உங்களை யாருடனும் சேர்த்து வைக்க வேண்டும் என்று சமாதான தூதுவனாகவோ, பவுத்த லூசாகவோ அல்ல. அடுத்த இடுகையை போட்டு கோவியை தாளிச்சிடாதிங்கையா.
:))

Ramani said...

/டோண்டு பத்தி உங்க கருத்துக்களை குழலி பதிவில் படிச்சேனுங்க/

இதுக்கா?
கொஞ்சம் நிதானமாக வாசித்திருந்தால், டோண்டுவைப் பற்றி என் தனிப்பட்ட கருத்து என்ன வென்று புரிந்திருக்குமே... நீங்கள் சொல்லும் மாசோயிஸ்டுதான் என்றுதான் சொல்கிறேன். பிறகும் எதற்கு அவருக்குப் பரிதாபம் சேர்க்கத் துணை போகின்றீர்கள்?

அவருடைய எழுத்தின் உள்ளே இருக்கும் நச்சு டூண்டுவிலும்விடப் பெரிது என்பது தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும். ஆனால், டோண்டு டோண்டுவின் பதிவிலே டூண்டு பாணியிலே ங்கோத்தா... நளினத்தோடு எழுதாதவரை என்னத்தைச் செய்யமுடியும்?அவரது நச்சினை பகிரங்கமாக வெளிக்காட்ட இது நல்ல சந்தர்ப்பம். மிகுதி நேரத்திலே எப்போதாவது, அவரின் பின்னூட்டத்திலே அவரை ஆதரிப்பவர்களே அவரைக் கடிந்து சொல்லிக் காணவில்லை. இப்போது நடந்திருக்கின்றது. இந்நேரத்திலே அவருக்குப் பரிதாபம் சேர்க்கும் முயற்சி எதற்கு என்பதே என் கருத்து. அவரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்.

OSAI Chella said...

See the top of the blog

FLASH ANOUNCEMENT: Remove your bookmorks
இந்த வலைப்பூ இன்றோடு கருகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடிக்கப்படுவதை விரும்பாமல்!

Ramani said...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

செல்லா,
இப்பொழுது எதற்காக வலைப்பதிவினை மூடுகின்றீர்கள் என்று எனக்குப் புரியவேயில்லை. ஆசாரி, பூசாரி, ஐயன், பையன், ஐயங்கார், அபயங்கார் ரொட்டிக்கடைக்காரர்கள் கதைக்காக ஆடிப்போய் எவராவது பதிவினை மூடுவார்களா? இது ஆக, அவர்களுக்கு வெற்றி என்பதாகத்தான் முடியுமென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. அதன்பிறகும் எதற்காக இப்படியான முடிவென்று எனக்குப் புரியவில்லை.


/பூணூலஎதித்து ஞாயம் கேட்டா தமிழ்மணம் மட்டுமில்லங்க .. சுப்ரீம் கோர்ட்டே கூட அவ்வளவு சீக்கிரம் நீதி சொல்லி வெளிச்சங்காட்டாதுங்க../

இப்படியான பொதுப்படுத்தலுக்குத்தான் எனக்குப் பயமாகவிருக்கின்றது. தமிழ்மணம் என்ன செய்யுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், என் கருத்தினைத்தான் நான் சொன்னேன். பூணூல எதித்து ஞாயம் கேட்டா தமிழ்மணம் நீதி சொல்லாது என்கிறீர்கள்; இரண்டு நாளைக்கு முன்னாடிதான் (குறைந்தது) ஒரு பதிவர் செல்லா, செந்தழல் ரவியை எதிர்த்துக்கேட்டால் தமிழ்மணம் நீதி சொல்லாதென்று சொல்லியிருந்தார். :-(

டோண்டு செயற்படும் விதத்தினை அறியாத அளவுக்கு நானோ பதிவர்களோ இல்லாமலில்லை. அதன் உள்ளடக்கமும் தந்திரமும் டூண்டுவைவிடப் பெரிதான தாக்குதல் கொண்டவை. ஆனால், டூண்டு எழுதும் முறைக்கும் டோண்டு எழுதும் முறைக்கும் வித்தியாசமிருக்கின்றதென்பது உண்மை. எதை வைத்து எத்திரட்டியானாற்கூட விலத்த முடியுமென்று எண்ணுகிறீர்கள்?
அவரின் தந்திரங்களையும் உள்ளடக்கங்களையும் காட்டியா?
நான் சொல்வதெல்லாம், அவரின் தந்திரத்தினை அவரின் தந்திரத்தினாலேயே நீங்கள் முறியடிக்கவேண்டுமென்பதை. அவரது இஸ்ரேல் குறித்த பதிவுகள் அவரின் சுயரூபத்தினை அவரின் நண்பர்களுக்கே காட்டி வெறுப்பேற்றியிருக்கும் நிலையிலே அதனைப் பயன்படுத்தி, அவரினை மடக்குவீர்களா? அதைவிட்டுவிட்டு, அவருக்குப் பரிதாபம் ஏற்பட வசதி செய்துகொடுப்பீர்களா? அவர் அந்தக்காலத்திலிருந்தே அதைத்தானே எதிர்பார்க்கின்றார்? :-(

Sri Rangan said...

செல்லா,எழுதுவதென்பது...உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதென்றும் ஒரு அர்த்தமுண்டு.அந்தவுணர்வுகளை நீங்கள் மற்றவர்களோடு பகிரும்போது ஒரு சிறுபொறியாவது தட்டுப்படும்.அது சிலருக்கு உதவும்.மற்றும்படி தமிழ்ச் சூழலில் பெரிய கண்டுபிடிப்புகளை நிறுவும் விஞ்ஞான சூத்திரங்களை எவரும் எழுதிக் குவிக்வில்லை!எல்லோரும்தாம் சொதப்புகிறோம்.அந்த சொதப்பலிலும் ஏதோவொன்று நிகழ்கிறது.அது, அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது.இப்போது, உங்கள் எழுத்துக்கள்கூட அதையே செய்கிறது.ஆதலால்,எங்கேயும் போய்விடாதீர்கள்.தொடர்ந்தெழுதுங்கள்-இது உங்கள் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டதெனினும்,நாம் வாசகர்கள் என்றமட்டத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்வது சாத்தியமாகிறது.


நாம் யாருக்காக எழுதுகிறோம்?


நிலவுகின்ற கட்டுமானங்களை-அதிகாரங்களை,நமக்குள் மறைந்திருக்கும் எல்லா வகைக் கண்றாவிகளையும்"கேள்விக்குட்படுத்தும்"ஒரு முயற்சியாக-மற்றவர்களின் அநுபவத்தோடு நம்மைச் சீரமைக்க என்றால்-தொடர்ந்தெழுதுங்கள்.உலகம் மிகவும் உண்மையானது.அதுள் எல்லாவகைக் காரணிகளும் புனைவின் நீட்சிதாம்.இது உயிரினது பெறுமானத்தை-இருத்தலைச் சேதாரப்படுத்தும்போது,நமது(உயிரிகள்) இருப்புக்காக ஜீவ-மரணப் போராட்டம் செய்வது உயிர்களின் நியதிகளில் ஒன்றுதாம்.

மாயா said...

வேண்டாம் . . . .

வேறேதும் சொல்லத்தெரியவில்லை

OSAI Chella said...

i removed Tamil input softwares and hence excuse my lingo.

Let us celebrate this death ...
Leave me your best wishes...
From my widhered petals ...
Nice flowers may blossom ...

When that happens the fragrance may reach me and I will be resurrected from my fossiled last breath !

Till then ...

Cheers to all!!

Forgive me all my heated words, this wild flower came to this world with unavoidable thorns!lol!

Cheers to Moorthy and Dondu for giving me this last peace! As Osho said I am an empty boat at the ultimate moment. Wont carry anything with it. You doubt.. call me. Trust my love and broadmindedness. My only wish is ... may the existance shower the same peace and calmness on you too.

With love and laughter ...
Osai Chella
.. the gypsy guy who love and live on web with no hangovers ... other than the one caused by his lovable red wine! If you wanna say something here.. say CHEERS!

Dharan said...

Blog எழுதுவது நம் சுதந்திரம் அதை Dondu , Poli Dondu and
Thamizmana த்துடன் தொடர்பு படுத்தி எழுதுவதை நிறுத்துவது சரி இல்லை என்பது என் கருத்து.

சுகுணாதிவாகர் said...

செல்லா,

நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்களோ என்று தோன்றுகிறது. இருந்தபோதும் உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். போலி டோண்டுவை ஏதோ கெட்ட வார்த்தையால் திட்டுபவர் என்றே பலரும் கண்டணத்தைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனரே தவிர, அவரிடத்தில் உறைந்துபோயிருக்கும் தலித்விரோத ஆதிக்கச்சாதித் திமிர் குறித்தும் ஆணாதிக்கப் பாசிச மிருகவெறி குறித்தும் கண்டணங்கள் எழக்காணோம். ஏனெனில் எல்லோரிடத்திலும் (நான் உட்பட) ஆணாதிக்கமும் பார்ப்பனீயமும் வெவ்வேறு விகிதங்களில் உறைந்துபோய்த்தானிருக்கின்றன என்றே கருதுகிறேன். உண்மையில் போலி டோண்டுவிற்கு எதிரான முதல் கண்டணம் அவனது 'தலித் கம்மனாட்டி' என்னும் வார்த்தைக்கெதிராகத்தான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நமது ஆரிய, திராவிட செயல்வீரர்களுக்கு அதைவிட வார்த்தைகளின் நாகரிகம் குறித்துத்தான் கவலை. உங்கள் உணர்வுகளில் பங்கெடுக்கும் அதே வேளையில் டோண்டு உட்பட எவனையோ எவளையோ தமிழ்மணம், இன்னும் வேறு திரட்டிகளிலிருந்தும் விலக்கிவைப்பதால் ஒரு மசிரு பலனும் விளையப்போவதில்லை என்பதையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இரணியன் said...

போலி-ஒரிஜினல்-போலி ஒழிப்பாளர்கள் - வேடிக்கை மட்டும் பார்ப்பவர்கள் - ஏத்தி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் பற்றிய எனது கருத்துக்கள் இங்கெ -

போலியும் ஒரிஜினலும் எந்த சந்தேகமும் இல்லாத அளவுக்கு முற்றிய மனோநோய் கொண்டவர்களாகப் பார்க்கிறேன். ஆம் சுகுனா சொன்னது போல் நாமெல்லோரும் மனநோயின்(கொஞ்சமேனும்) இயக்கப்போக்கிலேயே இயங்கி வருகிறோம். போலி என்பவர் தோன்ற ஒரிஜினல் தேவையில்லை ஒரிஜினல் இல்லாமல் போயிருந்தாலும் போலி தோன்றியே இருப்பான்.. ஆனாலும் இங்கே போலியின் தோற்றத்திற்கு தேவையான புறச்சூழல்களை உண்டாக்கி வைத்தது ஒரிஜினல் என்பதில் எல்லோரையும் போல் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தோற்றம் மற்றுமில்லாமல் போலியாரின் வளர்ச்சிக்குத் தேவையான விளம்பரங்கள் தேடித்தந்ததும் ஒரிஜினலாரின்(!?) கைங்கர்யமே. இதில் எவர் ஒழிக்கப்படவேண்டியவர்கள்? என்னைக் கேட்டால் - இருவருமில்லை.

"உன்னை தலித் கம்மனாட்டி என்று திட்டியிருந்தால் இப்படி சொல்லுவாயா?" / உன்னுடைய தாயைப் புணர்வேன் என்று சொல்லி இருந்தால் இதே நிலை எடுப்பாயா?" / "உனக்கென்ன கால்மேல் கால் போட்டுக் கொண்டு கருத்து கந்தசாமியாகி விட்டுப் போய் விடுவாய் ஆனால் எதிர் கொண்டது நாங்கள் தானே?" இது போன்ற கேள்விகளுக்கு எந்தவித அர்த்தமும் இல்லை. இந்த நிலையில் நானிருந்திருந்தாலும் உணர்ச்சிவயப்பட்டிருப்பேன் தான் ஆனால் போலியார் மற்றும் ஒரிஜினலார் ஆகிய இருவருக்கும் விளம்பரங்கள் கொடுத்து அவர்களிருவரின் வெற்றியையும் உறுதிப்படுத்தி விட்டிருக்க மாட்டேன் என்பது மட்டும் உறுதி.

இப்போது போலியும் வென்று விட்டார் ஒரிஜினலும் வென்று விட்டார்! பன்றியைத் துரத்தக் கிளம்பியவர்களுக்கு மிஞ்சியது சாக்கடை நாற்றமும் விரக்தியும் தான்!

அடுத்து இதில் மிஸ்டர் க்ளீன் ஆக வேஷம் கட்டி, "சார் இது குழந்தைகள் கூட புழங்கும் இடம் தெரியுமா?" என்பவர்களுக்கு - உங்கள் குழந்தைகளை தினத்தந்தியும் தினமலரும் வாரமலரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும், சன் டீவியும், மற்ற குப்பைகளும் கெடுத்து விடுவதை விட போலியார் வந்து கெடுத்து விட முடியாது. முதலில் எது "கெட்டுப் போன நிலை" என்பதிலேயே உங்கள் குழப்பம் தொடங்குவதாக் நினைக்கிறேன்.
இவர்களுக்கு "உங்கள் குழந்தை நீங்கள் "விரும்புவது" போல் வளர வேண்டுமானால் வீட்டுக்குள் ஒரு சிறை வைத்து அதில் அடைத்துப் போட்டு வளருங்கள்" இல்லை கண்களையும் காதுகளையும் பிடுங்கி விட்டு தெருவுக்கு அனுப்புங்கள்.

சமுதாயத்தின் கசடுகள் உள்ள வரையில் அது எல்லா இடங்களிலும் ப்ரதிபலித்தே தீரும். நான் கசடென்று போலியை மட்டும் சொல்லவில்லை!

போலி ஒழிப்பாளர்களே, நீங்கள் மேலே உள்ள வரிகளைப் படித்துணர்வீர்கள் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

இங்கே சகல தரப்பையும் ஏற்றி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் புத்திசாலிகள். துரதிர்ஷ்ட்டவசமாக புத்திசாலித்தனம் பெரும்பாலும் பார்ப்பனர் சம்பந்தப்பட்டதொரு விடயமாகவே இருந்து விடுகிறது. இப்போது குட்டை குழம்பிக் கிடக்கிறது.. மீன்களோ புத்திசாலிகள் வசமாகிக் கொண்டிருக்கிறது.

மெய்யாலுமே இந்த புத்திசாலிகளை நாம் அடையாளம் கண்டு கொள்வது தேவையானதொன்றாக இருக்கிறது. எல்லா நேரங்களிலும் புத்தி வெற்றி பெறுவதையும் உணர்ச்சிவயப்பட்ட இயக்கங்கள் crashஆகிக் கொண்டிருப்பதையும் ( செல்லாவின் கடைசி விரக்திப்பதிவு) பார்த்துப் பார்த்து சலிப்பே ஏற்படுகிறது.

இந்த விளையாட்டு இத்தோடு முடியப்போவதில்லை - மீண்டும் ஒரு செல்லா வருவார், மனசொடிந்து போவார். ஒரிஜினலும் போலியும் வெற்றி பெற்றுக் கொண்டேயிருப்பார்கள்.

நன்பர்களே என் மேல் கோபம் வேண்டாம் - afterall - நீங்கள் கடந்த பத்து நாட்களாக பாடுபட்டு வரும் வலை சுதந்திரத்தை நான் பயன்படுத்திக் கொண்டுள்ளேன் அவ்வளவே! அதற்காக உங்களுக்கு என் நன்றிகள்!

கடைசிய சில வார்த்தைகள் - "உங்கள் உத்தியை மறுபரிசீலனை செய்யுங்கள்"!!!!!

இப்படிக்கு

~இரணியன்~
iraniyan07@gmail.com

பிருந்தன் said...

செல்லாவிற்கு,

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்து எழுந்து வந்த வேகத்தை பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன், எங்களுக்கு எல்லாம் கட்டாயம் எழுந்து வந்தே ஆகவேண்டும் அல்லது மரித்து விடுவோம், ஆனல் உங்களுக்கு அப்படி அல்ல எப்படியும் வாழ்ந்து இருக்கலாம், ஆனால் நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வீறு கொண்டு எழுந்து வந்ததுதான் எம்மை வியப்பில் ஆழ்தியது, நாம் படித்து கொள்ள பலர் உலகத்தில் இருக்கிறார்கள் என்று வியந்த வேளையில், உங்கள் விலகல் இன்னொரு வியப்பில் ஆழ்த்துகிறது, வாழ்க்கையில் ஜெயித்தவன் வலைப்பூவில் வீழ்ந்து விட்டான் என்று,இரண்டு வியப்புக்களுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு புரியுமென் நினைக்கிறேன். விலகுவது உங்கள் த்னிப்பட்ட விருப்பு.

"பூந்தோட்டமா வாழ்க்கை இல்லை போராட்டமா வாழ்க்கை"

"போராடினால்த்தான் வாழ்க்கை, போராட்டம் இல்லையென்றால் போர் அடித்து விடும் வாழ்க்கை"

மு. சுந்தரமூர்த்தி said...

செல்லா,
குழலியின் பதிவில் ரமணியின் பின்னூட்டத்தினை நானும் படித்தேன். நீங்கள் அவர் மீது கோபம் கொள்ளும்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மூர்த்தி உங்களை சாதிக் குறிப்பிட்டு தாக்கி எழுதிய இடுகைகள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்டதாகத் தெரியவில்லை. தனி அஞ்சலில் அப்படி எழுதியிருந்தால் தனிப்பட்ட அளவில் ரமணியோ அல்லது நானோ அல்லது தமிழ்மணத்தோடு தொடர்புடைய வேறு யாரேனும் உங்களுக்கு தார்மீக ஆதரவைத் தெரிவிக்க முடியுமே தவிர தமிழ்மணம் என்ற அமைப்பு ஒன்றும் செய்ய இயலாது. இப்படி தனிப்பட்டவர்களின் செயல்களுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க வேண்டுமென்றால், தமிழ்மணம் நிர்வாகத்தில் உள்ள பலரும் தமிழ்மணத்தின் மீது கோபம்கொண்டு விலகவேண்டியிருக்கும். மூர்த்தியின் தாக்குதலுக்கு காசியிலிருந்து ரமணி வரை யாரும் தப்பவில்லை. இருவாரங்களுக்கு முன் தமிழ்மணத்துடன் தொடர்புடைய பலருக்கும் சட்னிவடையின் அர்ச்சனைகள்-மிரட்டல்கள் மின்னஞ்சலில் வந்திருக்கின்றன.

வெவ்வேறு அவதாரங்களில் தமிழ்மணத்தில் புகுந்த மூர்த்தியை அது தெரிந்தபோதெல்லாம் உடனடியாக நீக்கியிருக்கிறது. இப்போதைய பிரச்சினை மூர்த்தியை நீக்குவதா வேண்டாமா என்பதில்லை. டோண்டு ராகவனை நீக்குவதா கூடாதா என்பது தான். அதற்கு தான் ரமணி அதில் உள்ள சிக்கலைப் பற்றி தன் கருத்தை கூறியிருந்தார். அதுவும் தன்னுடைய சொந்த கருத்து என்பதை முன்னுரையிலேயே தெளிவாக்கியிருக்கிறார்.

காசியின் காலத்திலிருந்தே தமிழ்மணம் தானாகவோ, பிறர் அளித்த புகார்கள் அடிப்படையிலோ அல்லது பதிவர்களின் சொந்த விருப்பத்திற்கு இணங்கியோ சில பதிவர்களை நீக்கியுள்ளது. தமிழ்மணம் தானாக யாராவது ஒரு பதிவரை நீக்கிய போதெல்லாம் அது பெரிய அராஜகமாக சித்தரிக்கப்பட்டு சிலர் காச்மூச்சென்று கத்தியிருக்கிறார்கள். சிலர் தங்களையும் நீக்கவேண்டும் என்று வம்பு செய்திருக்கிறார்கள். மூர்த்தியின் மனநோயின் பாதியளவு முற்றிய குசும்பன் என்ற வக்கிரத்தை சில ஆண்டுகளுக்கு முன் காசி நீக்கியபோது வம்பு செய்த புனித பிம்பங்கள், இப்போது மூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கூச்சலிடுகிறார்கள். குசும்பனின் வக்கிர எழுத்துக்களை பாராட்டியும், ரசித்தும் வந்த பெண்ணியவாதிகள் மூர்த்தியின் அராஜகத்தைக் கண்டு குமுறுகிறார்கள். இப்போது டோண்டுவை தமிழ்மணத்திலிருந்து நீக்கினாலும் சில புனிதபிம்பங்கள் கொதித்தெழுவார்கள்.

எல்லா சமயங்களிலுமே பதிவர்கள் தனிப்பட்டமுறையில் பாதிப்புக்கு உள்ளாகும்போது எதிர்வினை செய்கிறார்களே தவிர, பிறநேரங்களில் ரசிக்கவே செய்கிறார்கள். சுகுணா திவாகர் சொல்லியிருப்பது போல எல்லோருக்குமே இந்த மனநோய் வெவ்வேறு அளவில் உள்ளது. வலைப்பதிவுகளை பாதிப்பது தனிப்பட்டவர்களின் செயல்பாடுகள்/பாதிப்புகள் என்பதை குழு அரசியலே.

அருண்/ Arun Kumar said...

Hey chella ignore those guys
hey man common as usual :)

அருண்/ Arun Kumar said...

hey chella i just published a comment on suguna diwakar blog

i am scared he wont publish
anyway i am giving a copy here

//Kasi Arumugam - காசி said...

//நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.//

ஓஹோ அப்படியா? ரொம்பத்தான் அறிந்தவர் நீங்கள்.

//நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!//
எங்கே கொஞ்சம் லிங்க் எடுத்துப்போடமுடியுமா தம்பி?//

திரு காசி ஆறுமுகம் அவர்களே தமிழ் வலைபூக்கள் வளர்க்க நீங்கள் பாடுபட்டது வெகு அதிகம். இந்த லக்கிலுக் என்ற பதிவர் தமிழ் வலைபூக்கள் அழிக்க வெகுவாக பாடுபட்டு கொண்டு இருக்கிறார்.

என்ன ஆதாரம் வேண்டும்??
நான் இந்த கிருழ்ணா என்ற இந்த லக்கிலுக் போல ஒரு பஞ்சோந்தி துரோகியை வாழ்க்கையில் இது வரை பார்த்தது இல்லை. இவனால் நான் என் வாழ்க்கையில் பட்ட கழ்டம் சொல்லி மாளாது. மூர்த்திக்கு முதல் அல்லைகை இவன் தான். நானும் அக்னிசிறகு என்று தமிழ்மணத்தில் எழுதியவன் தான். ஆனால் இந்த லக்கிலுக்கின் போட்டு கொடுத்தல் அல்லத்து கூட்டி கொடுத்தல் காரணமாக தமிழ் பதிவுலகை விட்டு விலகி விட்டேன்.. காரணம் என்னவாக இருக்கமுடியும்.. இது போல சாக்கடைகளோடு என்னால் போராட முடியவில்லை
என்னை பற்றி சைகோ மூர்த்தி நான் வேலை பார்க்கும் இடத்தில் புகார் கொடுத்தான்..என்னவாம்.. நான் இணையத்தில் ஆபாசமாக எழுதுகிறேனாம் :) .. சரி என் பெயர் ஊரு கம்பேனி எப்படி அவனுக்கு தெரிந்தது?? எல்லாம் இந்த லக்கிலுக் தான் கொடுத்தார்..

என்னிடம் அனைத்து ஆதாரமும் உள்ளது..

திரு காசி அவர்களே அந்த பொறம்போக்கு மூர்த்தியால் நான் பாதிக்கட்டது பல.,மூர்த்தியை எதிர்த்து நீங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் அங்கு நான் கைஎழுத்து இட த்யார்.. கூடவே இந்த அல்லைகை லக்க்கிலுக் சைக்கோ மூர்த்தி தொடர்பு குறித்தான வலுவான அசைகக்முடியாத ஆதாரம் என்னிடம் உண்டு.. அதை சைபர் க்ரைமிடம் சம்ர்பிக்க த்யார்..

PRINCENRSAMA said...

அதிரடித் தலைப்புகளோடு நீ
திரும்ப வருவாயென....

இணைய நாடோடியென்று எப்போதும் உன்னை அழைத்துக்கொள்ளும் நீ!
திரும்ப வருவாயென....

உனக்காக தமிழ்மணத்தின்
சூடான இடுகைகள் காத்திருக்கின்றன...
நீ
திரும்ப வருவாயென....

நானும்தான்!

எழில் said...

அன்பின் ஓசை செல்லா,
கண்ணீர் வரவைக்கும் வார்த்தைகளை எழுதியிருக்கிறீர்கள்.
தமிழ்மணம் மட்டுமே தமிழ் வலைப்பதிவுலகம் அல்ல. (தமிழ்மணத்தின் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்வும் கிடையாது என்பதையும் இங்கே குறித்துவிடுகிறேன்)
அது வெறும் பிளாக் அக்ரிகேட்டர் மட்டுமே. அதற்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.
you are you are by the friends you keep.
அது கிடக்கட்டும். தமிழில் வராத எத்தனையோ செய்திகளும் அறிவும் வரவேண்டியிருக்கின்றன. நாம் நமக்காம மட்டும் வலைப்பதிவு நடத்துவதில்லை (அப்படியென்றால் வெறும் டைரி போதுமே)
தமிழில் தொடர்ந்து எழுதுங்கள். நம் சகோதர சகோதரிக்களுக்காக

நட்புடன்
எழில்

வெற்றி said...

/* ஆனா இன்னையிலிருந்து நான் சாக்கடையில்ல பீயள்ளத்தான் லாயக்குன்னு புரிஞ்சு போயி இனிமேல் தமிழ்
வலைப்பதிவுல எழுதறதுக்கே முற்றுப்புள்ளி வச்சுட்டனுங்க.. */

செல்லா,
மேலே நீங்கள் சொல்லியுள்ள முடிவை மாற்றுவீர்கள் என நம்புகிறேன். உங்களின் மன நிலை எனக்குப் புரிகிறது.

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு