என்ன சொல்ல ... தோழி இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது. அராஜகங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் இல்லாத சக்தி அன்புக்கு இருக்கிறது. இன்னும் 5 மணி நேரம் கொடுத்து அன்பு ப்ளாக் மெயில் செய்ய உனக்கு என்ன காரணம்? .. ஒன்றும் புரியவில்லை...
நான் என்ன கிழித்துவிட்டேன் என்று இப்படி மிரட்டுகிறாய்.. கணநேரம் கூட என்னை கண்ணயரவிடாமல்..
ஒன்றும் புரியவில்லை. நீ என்னைப் புரிந்து கொண்டாயா இல்லை... புரியாமல் உளறுகிறாயா... "பொறுக்கி ... மறுபடியும் எழுதுடா" என்று ...
நீ போராளி யென்று எனக்குத் தெரியும்.. நானும் அப்படித்தான்....
ஆனாலும் அடுத்த முறை வேறு ஆயுதம் கையிலேந்தி வா ...
(அன்பைத்தவிர) போரிட்டுப் பார்க்கலாம் !
இப்பொழுது சந்தோசம் தானே?
அன்புடன்...
ஓசை செல்லா
பின் குறிப்பு: நேற்றுமுதல் எனக்கு வந்த ஒவ்வொரு போன்கால்களும் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் கொண்டிருந்தன... இருந்தாலும் மாதக்கணக்கில் மௌனமாய் இருக்க அவர்களிடம் போராடினேன். டிபிசிடி, தியாகு போன்ற மாற்றுக்கருத்து நண்பர்கள் கூடஎழுந்துவா என்று அழைக்கையில் நான் மிகவேகமாக கரைந்தேன். ஆனாலும் ஒரு பேராசான் ( My Grand Teacher ) "வந்து தொலைடா... என்று திட்டியபோது.. என் உறுதி .. உருக்குலைந்து போனது. இதோ வந்து விட்டேன் இதயங்களே.. இன்னொரு முறை உங்கள் அன்பை எனக்காக செலவிட்டு விடக்கூடாது என்ற உறுதியுடன் ... மீண்டும் என் ஓசை வலிமையாக ஒழிக்கும்.. இந்த முறையும் தாக்குவான் இந்த செல்லா ... என் எதிரியாயிருக்க தகுதியுள்ளவனை ... நேர்மையும் தன்னலமற்ற மனமும் ... ஒரு சதவீதமாவது இருப்பவனை மட்டுமே !
நண்பன் குழலி மற்றும் செந்தழல் ரவிக்கும் ... என்னை மன்னியுங்கள் .. அப்படியொன்றும் உங்களை விட்டு விட்டு பாதிவழியில் பறந்துவிடுமா இந்த சுதந்திரம் விரும்பும் கழுகு!
தனக்காக போராடும் மாந்தரின் சாவு நிரந்தரமானது... ஆயிரம் ஆயிரம் இதயங்களுக்காக போராடுபவனுக்கு சாவுகள் கூட கணநேரம் தான் என்பதை என் முதல் சுவாசம் வலையுலகெங்கும் "தமிழின் மணத்"தோடு சொல்லட்டும்! கண்ணீரோடு சென்றவனை கரம்பிடித்து கல்லறையிலிருந்து மீட்டெழுப்பிய அனைத்து பதிவர்களுக்கும் .... ஒரு சிறு வேண்டுகோள்... என் சிறுகிறுக்குத்தனத்தை மன்னித்து விடுங்கள் தோழர்களே, தோழியரே!
மன்னித்து விடுங்கள் தோழர்களே! அன்பின் சூழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டேன் ...
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு
[Train_PNR_Status] [Train_Reservation] [Airdeccan] [JetAirways] [AirIndia] [Red_bus] [KPN_Travels] [TN_Govt_Bus] [Karnataka_Bus] [KTM_Malasia] [SMRT_Singapore]





32 பின்னூட்டங்கள்:
:)
மேலே இருக்கும் FLASH ANOUNCEMENT ஐ எடுத்து விடலாமே?
that is the spirit. thank you.
இப்பத்தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு....
அசத்துங்க செல்லா...
சபாஸ்
ஆமா வந்துவுடனே ஏன் தமிழச்சியை வம்புக்கு இழுக்குறீங்க
நல்ல முடிவு......வாழ்த்துக்கள் செல்லா.....
கல்லறையிலிருந்து மீட்டெழுப்பிய அனைத்து பதிவர்களுக்கும் .... ஒரு சிறு வேண்டுகோள்... என் சிறுகிறுக்குத்தனத்தை மன்னித்து விடுங்கள் தோழர்களே, தோழியரே!
மன்னிக்க வேண்டும் என்றால் you have to accept the Punishment
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இனி நாள் ஒன்றுக்கு 5 பதிலா 10 மொக்கை/கலாய்தல் பதிவு போட வேண்டும்.
இது தான் உனக்கு தண்டனை
eஐயையோ.. இப்படி நம்ம ஓசை பேய், அந்தர்பல்டி அடிச்சு ரிட்டர்னாகும்னு தெரிஞ்சிருந்தா அங்கன போய் ஒரு கமெண்ட் போட்டு என் நேரத்தை வேஸ்ட் பண்ணிருக்க மாட்டனே..
thamizachi foto super..
சந்தோசம் வாழ்த்துக்கள் !!!
I am really happy to see you back.
Jyovram Sundar
வாழ்த்துகள் செல்லா.
CHEERS!!!
:))
அப்டி போடு அருவாள...
மவனே நீ எங்கே செல்லும் இந்தப் பாதைன்னு பதிவு போடும்போதே நெனச்சேன்...
பெரியவங்க இதுக்கு தானே சொல்லி இருக்காங்க...
"குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு"
ஹிஹிஹி...
தோழரின் புகைப்படம் நன்று. நான் திருடிக் கொள்ளவா????
இந்த அட்டகாசம்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சுதான் நேற்று போறேன்னு சொன்ன பதிவுல ஒன்னும் கமண்ட் போடல்ல மாம்ஸ்
அப்பறம் இந்த வேர்ட் வெரிவிக்கேஷ்னை எடுக்கவும்..
வரும்போதே..ரோசாப்பூவோட வருகிறீர்களா..
என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது..
ஒன்னுமே புரியல உலகத்தில..
//வரவனையான் said...
இந்த அட்டகாசம்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சுதான் நேற்று போறேன்னு சொன்ன பதிவுல ஒன்னும் கமண்ட் போடல்ல மாம்ஸ்
//
repeattuuuu
நல்ல முடிவு
ஏன் வரும் போதே பெரியாரின் ஊடக பேச்சாளருடன் கொழுவிக்கொண்டு வருகிறீர்
"சிறு சலசலப்புக்கு அஞ்சலாமா பனங்காட்டு நரி "
துணிந்து நில்லும் துணைக்கு யாமிருக்கோம் கயவரை வேரோடு சாய்ப்போம்
ம்..ம்ம்ம்...
இந்தப் பதிவில் எதற்குத் தமிழச்சியின் புகைப்படம்? ஏன் தமிழச்சி சொல்லவில்லையென்றால் நீங்கள் வரமாட்டீர்களா? நீங்கள், பொட்டிக்கடை சத்யாவெல்லாம் என்ன விளையாட்டு நடத்துகிறீர்கள்? இதற்குத் தமிழச்சியும் உடந்தைதானா? அப்படியானால் பெரியாரியம் என்பது ஜொள் விடுவதற்கான உபகரணமா?
வாழ்த்துகள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
9442029053
தமிழ்மணம் இணைப்புத்தரும் முறையை விளக்குக.
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை!!
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை!!
வாழ்த்துக்கள் ஓசை செல்லா...மீண்டும் எழுதுங்கள்...மீண்டு எழுதுங்கள்
வணக்கம் தோழர்!
இன்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. இனி உங்களுடைய ஆக்கங்கள் எல்லாம் பகுத்தறிவு சார்ந்ததாகவும், சமூதாயத்திற்கு உகந்ததாகவும் இருக்கும் என்று சொன்னதற்கு மிக்க நன்றி.
பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் அறிவிப்பைக் கண்டு மரணத்திற்கு பிறகு உங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக குறிப்பீட்டு இருந்தீர்கள். அதற்கான வேலைகள் முடிந்ததும் அத்தாட்சிகள் இருந்தால் அனுப்பி வைக்கவும்.
தோழர் பொட்டீ கடை அவர்களும் உங்களைப் போன்றே உறுப்புகள் தானம் செய்துள்ளார். கூடிய விரைவில் அத்தாட்சிகள் அனுப்புவார். வேறு விபரங்கள் வேண்டுமானால் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே!
ஓசையிடம் மெளனமாக சில கேள்விகள்,
அது என்ன காந்தியும் மாசோகிஸ்டா,அப்படின்னா சிலுவையில் தொங்கிய இயேசுவும் அதேதானா?
அல்லது \எங்கோ செல்லும் இந்த பாதை என சாக்கடையை சுத்தம் செய்து சுட்டுக்கொண்ட ஓசையும் மாசோகிஸ்டா
அன்புடன்
மெளனம்
வாங்க செல்லா.
வாழ்த்து(க்)கள்.
நன்றி செல்லா.
//இன்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. இனி உங்களுடைய ஆக்கங்கள் எல்லாம் பகுத்தறிவு சார்ந்ததாகவும், சமூதாயத்திற்கு உகந்ததாகவும் இருக்கும் என்று சொன்னதற்கு மிக்க நன்றி.
பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் அறிவிப்பைக் கண்டு மரணத்திற்கு பிறகு உங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக குறிப்பீட்டு இருந்தீர்கள். அதற்கான வேலைகள் முடிந்ததும் அத்தாட்சிகள் இருந்தால் அனுப்பி வைக்கவும்.//
தோழி, மிக்க நன்றி. நான் பகுத்தறிவு, சமுதாயம் பற்றி எழுதுவேன் என்று சொன்னேன். ஆனால் அவை மட்டுமே எழுதுவேன் என்று சொல்லவில்லைதானே! எனக்குத் தளைகள் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?
மேலும் உடல் தானம் செய்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. எடுத்ததும் சொல்கிறேன்.
" எனக்குத் தளைகள் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?"
good... i hope u will soon come out from clutches of OSHO....
He has wriiten in his bio grapahy that , he used to attack famous persons like gnadhi to get publicty( he has written he needed that publicity to apread his message to people)...
so dont take him seriously.. ofcource u can learn from any body.. so u can learn from hin also...
//என் சிறுகிறுக்குத்தனத்தை மன்னித்து விடுங்கள் தோழர்களே, தோழியரே!//
ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டு மன்னிப்போம் தோழர்களே!
செல்லா, ச்சியர்ஸ்!
செல்லா, ச்சியர்ஸ்!
(இந்தப் பதிவும் ஒன்னும் நக்கல் பதிவு இல்லியே?)
எதிர்பார்த்தது தான் செல்லா ! ஆச்சரியம் ஒன்றும் இல்லை. :)))
Post a Comment