ஒரு சிறு அறிவிப்பு!

எனது ஆடியோ வீடியோ (ஒலி ஒளி) ஓசை வலைப்பூ மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது என்ற தகவலை மகிழ்ச்சியிடன் அறிவித்துக்கொள்கிறேன்! தள முகவரி: http://osai.tamil.net

ஆசிப் & வலைப்பதிவர் சந்திப்பு: சொல்ல மறந்தவை.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி பலவிசயங்கள் நான்எழுதி இருந்தாலும் ஒன்று விட்டுப்போய்விட்டது. நான் பொதுவாக சில விசயங்களை அவை ஆழமானதாக இருக்கும்போது அவற்றை ஒத்திப்போட்டு சொல்வது வழக்கம்.

நண்பர் ஆசிப்மீரான் அவர்கள் பதிவர் பட்டறை வந்திருந்தார். சென்றமாதம் நான் சென்று வந்த பெங்களூர் சந்திப்பை மிகமிக கலகலப்பாக்கியவர். என்னைப் பார்த்தவுடன் அருகில வந்து வாஞ்சையுடன் கைகுலுக்கினார். நான் சிறிது அதிர்ந்தேன். அதற்கு முதல்நாள் தான் கிளம்பும் போது எழுத்தாளர் பாமரன் என்னிடம் சொல்லியனுப்பினார்... "மீரானையும் அவரது தந்தையையும் நேரில் சென்று பார்த்துவாருங்கள்" (சூலைமேடு என்று சொன்னதாக ஞாபகம்) ... அவர் வருகை நான்எதிர்பாராத ஒன்று.

தனது சொந்த சோகத்தைப் பொருட்படுத்தாமல் பட்டறைக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் ஆரம்ப கட்டத்திலேயே மைக்கில் தனக்கே உரித்தான அழகுதமிழ் நடையில் ... பட்டறையை வாழ்த்தி... பின் துபாயிலும் இதே போன்ற ஒன்றை ஒருங்கிணைப்பதாக அறிவித்ததும் மிகவும் ஆழமான விசயமாகப்பட்டது எனக்கு. ஒரு சில வினாடிகளே என்றாலும் தங்கள் வாயிலிருந்த வந்து விழுந்த தமிழின் அழகு என்னை சிலிர்க்கவைத்தது. தந்தைஎட்டடி தனையன் பதினாறடிஎன்று நினைத்துக்கொண்டேன். அந்த அரங்கிலேயே அந்த சில வினாடிகள் அழகானவை.

தமிழ் உங்களுடன் இருக்கும் வரை நீங்கள் அனைத்து சோதனைகளையும் தாண்டி மீண்டு வருவீர்கள் ... ஆயிரமாயிரம் பதிவர்கள் அமீரகத்தில் உருவாக ஒரு பட்டறையை நீங்கள் நடத்தும் பொழுது என்னால் இயன்ற உதவிகளை அவசியம் செய்வேன்.. நீங்கள் விதையுங்கள்... என்று வாழ்த்தும் ....

அன்பன் & நண்பன்
ஓசை செல்லா

13 பின்னூட்டங்கள்:

அபி அப்பா said...

இது பற்றி யாராவது எழுதுவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து போனேன்! மிக்க நன்றி செல்லா!

siva gnanamji(#18100882083107547329) said...

ஆமாம் செல்லா!
சொந்த சோகத்தை மறைத்து
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அவரை எப்படிப் பாராட்ட முடியும்........?
அவர் சொல்வது போல்,
"நல்லா இருங்க டே!"

மோகன்தாஸ் said...

//இது பற்றி யாராவது எழுதுவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து போனேன்! மிக்க நன்றி செல்லா!//

ஹலோ நான் எழுதினேன். :(

OSAI Chella said...

இங்கே சொடுக்கவும்

Voice on Wings said...

பட்டறை புகைப்படங்களில் ஆசிப்பின் புகைப்படத்தை பார்த்தது நெகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சியில் அவரது பங்கேற்பு எல்லா வகையிலும் பாராட்டப்பட வேண்டியது.

மலைநாடான் said...

செல்லா!
இது குறித்து யாரும் எழுதாதிருந்தது ஏமாற்றமே. உங்கள் இந்தப்பதிவும், உங்களது மாறுபட்ட பார்வையை வெளிப்படுத்துகிறது.

படங்களைப்பார்த்தபோது, ஒரு வயதான தம்பதியினரைக் கண்டேன். முடிந்தால் அவர்கள் பற்றியும் அறியத்தாருங்களேன்.

நன்றி

மோகன்தாஸ் said...

//செல்லா!
இது குறித்து யாரும் எழுதாதிருந்தது ஏமாற்றமே. உங்கள் இந்தப்பதிவும், உங்களது மாறுபட்ட பார்வையை வெளிப்படுத்துகிறது.//

பதிவுகளைத்தான் யாரும் முழுவதுமாய் படிப்பதில்லை என்பது திண்ணமான ஒன்று. பின்னூட்டங்களையுமா? நான் தான் போட்டிருக்கிறேனே எழுதினேன் என்று அதுவுமா தெரியவில்லை ;)

Boston Bala said...

நன்றி செல்லா

✪சிந்தாநதி said...

நானும் படங்களைப் பார்த்துதான் அறிந்தேன். என்பதிவில் எழுத நினைத்து...பிறகு என்ன எழுதுவது? என்ற நெகிழ்ச்சியுடன் எழுத இயலாமலே விட்டு விட்டேன்.

ஆசிப்பின் வலைப்பதிவுகள் மீதான ஆர்வத்துக்கும் செயல்பாட்டுக்கும் நன்றி

நிலவு நண்பன் said...

பட்டறையின் அவசரத்தில் ஆசிப்பின் வருகையை மறந்து விட்டார்களோ என்று நினைத்தேன்..நன்றி...

இந்தப் பட்டறை அவருக்கு மன ஆறுதலைத் தந்திருக்கும்

வெற்றி said...

நன்றி செல்லா.

மலைநாடான் said...

//பதிவுகளைத்தான் யாரும் முழுவதுமாய் படிப்பதில்லை என்பது திண்ணமான ஒன்று. பின்னூட்டங்களையுமா? நான் தான் போட்டிருக்கிறேனே எழுதினேன் என்று அதுவுமா தெரியவில்லை ;)//

மோகன்தாஸ்!

இப்போ பதிவு, பின்னூட்டம் இரண்டையுமே பாத்திட்டேன். மன்னிச்சுக்கப்பா :)

MSwathi said...

:) ஆமாம்.. மோகன் தாஸும் எழுதியிருக்கிறார்.

Blog Widget by LinkWithin

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு