எனது சமீபத்திய 5 பதிவுகள் இவை..

மாசிவாவிடமிருந்து சுடர் இப்போ நம்ம கையில் !






எனது கோவளப் பயணத்திலிருந்து நேற்று மாலை விமானத்திலிருந்து இறங்கி வீட்டை அடைந்ததும் செல்பேசி சிணுங்கியது! நண்பர் மா.சிவாவிடமிருந்து. செல்லா சுடர்ஏற்றியிருக்கிறேன். இப்பொழுது உங்கள் முறை என்று ஒரு தகவலைக் கொடுத்தார். எனக்கோ சிவாவை பலவருடங்களாகத் தெரியும். நல்ல ஒரு வலைநட்பு நிசவுலகிலும் தொடர்கிறது! அவருக்கு என்மேல் ஒரு சிறு ஆதங்கம். நான் இன்னும் நிறைய வலைதொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று! அது இந்த "சுடரிலும்" உள்ளது என்று நினைக்கிறேன். இதோ எனது பதில்கள் ...

1. இணைய உலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உங்கள் சிறப்பு அனுபவங்களைப் பற்றி ஏன் அதிகமாக எழுதுவதில்லை?
பதில்: பொதுவாக எனது வலைப் பயணம் வெளிநாட்டவர்களிடம் தொடர்பாகவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்து வந்தது. கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கவேண்டுமானால் பல நாடுகளில் பிரேஸில், கனடா, கிரீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து சேர்ந்த சில நண்பர்கள் இணையத்திலேயே ஒரு பத்திரிகை கூட நடத்தினோம். பல பதிவுகள் மறைந்துவிட்டாலும் ஒரு தளம் இன்னும் நினைவுச்சின்னமாக இருக்கிறது! செல்லாவின் பழைய இணயப்பத்திரிகையின் ஒரு இதழ் இங்கே!
மேலும் 2002 வரை எனது ஆன்மீகப் பயணங்களும் இணையத்தில் பரவிக்கிடப்பதை காணலாம். உதாரணமாக செல்லா விரும்பிய கிருஷ்ணர் இங்கே! இந்த அனுபவங்கள் என்னை ஒரு மிகப்பெரிய உலகளாவிய சிந்தனைத்தளத்திற்கு, புதிய கலாச்சாரங்களுக்கு என்னை இட்டுச்சென்றது என்றால் அது மிகையாகாது. உதாரணமாகச் சொன்னால் நாங்கள் எங்கள் பத்திரிகை விடயமாக சாட் செய்யும்பொழுது ( voiP, அகலக்கற்றை சேவை அப்பொழுது இல்லை 64 kbps ஒரு கனவாக இருந்த காலம்) பல்வேறு பண்டிகைகள் (உ-ம்: Boi Bumba, பிரேசியர்களின் அருமையான திருவிழா!) , மதங்கள் ( உ-ம்: Shinto - Japan , Dream Time - Australia ) போன்றவற்றைப் பற்றியெல்லாம் அறிய முடிந்தது ஒரு சுகமான அனுபவம். நேரம் வரும்பொழுது நிச்சயம்எழுதுவேன் உங்கள் அவாப்படியே!


Boi Bumba, பிரேசிலியர்களின் திருவிழா!

2. உங்கள் வலைப்பூவில், கையில் கருவியோடு இருக்கும் புகைப்படத்தை எடுத்தது யார்?

நானே தான்! கண்ணாடி முன் நின்று எடுத்தபோது என் நண்பர் சொன்ன கமெண்ட் " நீ ஒரு நார்சிஸ்ட்டாடா மாப்பிளை?"

3. உங்கள் இணைய ஊடக அறிவைப் பயன்படுத்தி பெரியாரது கொள்கைகளை பரப்ப ஏன் முயல்வதில்லை?
நான் பெரியாரது கொள்கைகளை பரப்பாமலா பலஆயிரம் ஹிட்கள் பெற்ற தளங்கள் உருவாகின? இட ஒதுக்கீடு பற்றியவை http://reservationfaqs.blogspot.com மற்றும் http://oomai.wordpress.com

கீழ்கண்ட தலைப்புகள் பெரியாரின் கருத்துக்களின் தாக்கங்களை உணர்த்தும்.

நானும் பெரியார் சொன்னவைகளையே திருப்பிச்சொல்வதைவிட அந்தந்த காலகட்டப் பிரச்சினைகளை கையிலெடுத்து ஒரு இணையப் போராளியாகச் செயல்பட்டதையே பெருமையாக நினைக்கிறேன். இணையத்தில் ஒரு சில இனங்களின் ஆதிக்கம், குரல் மட்டும் ஓங்கி ஒலித்தபோது நானும் என் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் எங்கள்எதிர்ப்பையும் ஓங்கி உறைத்தோம். உதாரணமாக கிரமமே பார்க்காத சில நகர மாணவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக "இந்தியக் கிரிகெட் அணியில் FC , OBC !" மற்றும் " கோட்டா டாக்டரிடம் ஆபரேசன் செய்வீர்களா" என்றெல்லாம் கேட்டபோது நாங்கள் அவர்களுக்கு மரண அடி கொடுத்தது இன்றும் பசுமையாக உள்ளது.எய்ம்ஸ் மருத்துவ மனையிலேயே படித்த மாணவர்களுக்கு அங்குள்ள மேற்படிப்பு வசதியில் கோட்டா இருந்தது, மேனேஜ்மெண்ட் கோட்டா, NRI கோட்டா போன்றவற்றிற்கெல்லாம்எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்த மாணவர்கள் ஓபிசி கோட்டா என்றதும் தெருவிற்கு வந்ததும் அவர்களின் போலித்தனத்தை ஒரு இணயப்போரால் ஆர்கட்டிலும், பல மின்குழுமங்களிலும் துகிலுரிந்ததும் ஒரு பெரியாரின் லட்சக்கனக்கான பேரன்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தானே! மேலும் அவர் என் சுயசிந்தனையை மழுங்கடிக்கும் வகையில் எந்த "வேதத்தையும்" கொடுத்துச் செல்லவில்லை! நீ ஆராய்ந்து பார். நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே என்று சொன்ன அழகான மனிதர் அவர்!

4. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, உங்களுக்கு?
1. சந்தோசமாக வாழ்வது. சந்தோசமாகச் சாவது! சாவைப்பற்றிய பயமே மதங்களின் தோற்றுவாய்! முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் நிறைவு பெறாதது தானே!

2. நாம் இந்த இடத்தைக் காலி செய்யும் போழுது சில நல்ல அழகான விசயங்களை வரும் சந்ததியினருக்கு விட்டுச் சென்றால் இன்னும் நலம். மேடுபள்ளம் அதிகம் இருந்தால் சாலையில் வாகனம் சீராகச் செல்லமுடியாது. அது போல சமுதாயத்தில் மேடுபள்ளங்கள் அதிகம் இருந்தால் அரசாங்கங்களும் சீராகச் செல்ல முடியாது. எனவே சிறிய அளவிலாவது சமன்படுத்த முயற்சிப்பதே எனது மற்றொரு குறிக்கோள்!

5. இணையத்தில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்தும் கும்பல்களை எப்படித் தடுத்து நிறுத்தலாம்?
வாங்குவது நிறுத்தினால் உருவாவது குறையும். மக்கள் விழிப்புணர்வே ஒரே வழி. மற்றபடி இணையத்தின் மறு பெயர் Wild Wild Web! தொழில் நுட்பங்கள் மூலமோ சட்டங்கள் மூலமோ தடுக்க முடியாது! நிசத்தில் முடியாதது வலையில் முடியும் என்ற நம்பிக்கைஎனக்கு இல்லை! வலையுலகில் "டார்" களும் ப்ராக்ஸிகளும் அவசியம் இருக்கும்! ( ஒருவகையில் இருக்க வேணும் .. இல்லாவிட்டால் வலையுலகம் ஒரு ஆல்டர்னேட்டிவ் மீடியாவாக இல்லாமல் கார்பரேட் மற்றும் அரசு சார்பான மீடியாக மாறும் அபாயம் அதிகம் உள்ளது!

நான் சுடர் ஏற்ற அழைப்பது தனது ஆசிட் இலக்கியத்தால் கொடுமைகளைச் சுட்டெரிக்கும் நண்பர் சுகுணா திவாகரை

1. உங்கள் வார்த்தைப் பிரயோகம் என்னை கவர்கிறது! ( உம்: பறவைகளின் சிறகசைப்பில் பொங்கித் தெறிக்கிறது கடல். உடல்கள் மொழிபெயர்க்கப்படும் பின்னிரவு வேளை. ஒரு திரவகணத்தில் கடவுள் கால் தடுமாறிவிழுகிறார். சாக்கடையில் தத்தளிக்கின்றன பெங்குவின்கள். முத்தமிடக்குவியும் டால்பினின் உதடுகளில் ரத்தத்துளிகள். இருள் உதிக்கிறது. ஒளி நசிகிறது. காலம் கரைகிறது. காத்திருப்பின் தனிமை தகிக்கிறது. உன் தொடைகளில் வழியும் உதிரத்தின் மொழியில் ஒரு சொல் எடு. கன்றிச்சிவக்குமொரு அடிவானத்தின் மடியில் உதிர்வதற்குத் தயாராயிருக்கிறது என் பெயர் சூட்டிக்கொண்ட நட்சத்திரம். சன்னல்களில் துருப்பிடித்துக்கிடக்கிறது காலம். கோப்பை நிறைய ததும்பி வழிகிறது மரணம். எனக்கு அழவேண்டும்போல இருக்கிறது. ஒரு குழந்தையின் சிறுநீர்ச்சூட்டின் கதகதப்பு எனக்குள் மெல்ல இறங்குகிறது. வெடித்துச் சிதறுகிறேன் நான்.)

உங்கள்எழுத்துக்களுக்கு INSPIRATION யார்?


2. தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் இவ்வளவு செயற்கைத் தனமாக இருக்க யார் காரணம்?

3. கவிதையின் விதை ?

4. நிதர்சனத்தின் நிசப்தங்கள் என்ற தலைப்பில் சில வரிகள்எழுதுங்களேன்? ( ஒரு ரசிகனாகக் கேட்கிறேன் )

5. "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" ... அடுத்து என்ன மாற்றம் நிகழ்த்தப் படவேண்டும் என்று நினைக்கிறீர்? ( சமூக மற்றும் இலக்கியக் தளங்களில் )


பின் குறிப்பு: சில நாட்களுக்கு முன்புதான் சொல்லியிருந்தேன்... யாரென்றே தெரியாது தேன்கூடு நடத்துவது என்று? இவர் தான் என்று இன்றுதான் அறிந்தேன் அவர் மரணச்செய்தி மூலம்! வாழ்க்கையின் முடிச்சுக்கள் விசித்திரமானவை. மாசிவா விற்கு நான்எழுதிய பதில்தான் ஞாபம் வருகிறது். எங்களுக்கு ஒரு தேன்கூடு விட்டுச்சென்ற தேனீயே ...எங்கள் இதயத்தில் தமிழின் சுவை தேனாக இருக்கும் வரை தேனி உன் நினைவும் இருக்கும் !

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Aasthigargalaagiya naangal seiyum prarthanaigal ungal vazvilum nalladaye nadakka udavattum

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு