Osai Chella's Facebook Links

ஒரு நடுநிசி நாய்க்கு . . .

என் நண்பன் யுவகிருஷ்ணா ஒரு சில வாரங்களுக்கு முன்பு எழுதிய விமர்சனம்!


கதவைத்திறந்தால் காற்று... மூடினால் காமிரா !நேற்று என் பலநாள் எழுதா விரதத்திற்கு ஒரு சோதனை! இணையமெங்கும் ஒரே குரல். சாட்களில் அது ரஞ்சிதாவா இல்லை ராகசுதாவா என்றெல்லாம் கேள்விகள்! அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது செல்லா என்றெல்லாம் போன்கால்கள். ஆகமொத்தம் நேற்றைய பொழுது முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களை விட டிபிஆர் ரேட்டிங்கில் அதிக இடம்பிடித்தது என் சர்வ நிச்சயமாய் சொல்லலாம். சன் டீவி வேறு முகம் தெரியாமல் ஒரு வெர்சன், பின் முகத்தோடு வெர்சன் 2 என்றெல்லாம் அரங்கேற்றியது. இது போதாதென்று நக்கீரன் வேறு முழு வீடியோவை பார்க்கனுமா சந்தா கட்டு என்று ஒரு போர்னோ சைட்டைவிட கேவலமாக கல்லா கட்டியது! பல்வேறு அமளிதுமளிகள் முடிந்து அந்த 20 நிமிட முழுகோப்பு பார்த்தபோதுதான் என்ன மேட்டர் என்று முற்றிலும் தெளிவானது!

அதாவது பரமஹம்ச நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் அவர்களது அறையில் கொஞ்சிக்குழாவிய காட்சிகள் தான் அவை. ஆனால் நமக்குத்தான் மாற்றுப்பார்வை பார்த்தே பழக்கப்பட்ட புத்தியாச்சே.. அதுதான் இந்த நச் கருத்துக்கள்!

1. பரமஹம்சரும், ரஞ்சிதாவும் வயது வந்த மேஜர்கள். அவர்களது அறைக்குள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். அவர்கள் அறையில் ட்ரெஸ்பாசிங் செய்து காமிரா மூலம் அடுத்தவன் அந்தரங்கத்தை எடுத்தவனுக்கு என்ன தண்டனை என்று சட்ட நிபுணர்கள் நிச்சயம் சொல்லவேண்டும்! ஒரு மேஜரான ஆணும் பெண்ணும் மனமொத்து தனிமையில் காமம் செய்வது அப்படியென்ன குற்றமா என்று ஒரு அறிவாளியும் கேட்கவில்லை! வெட்கக்கேடு! எழுத்தாளர்களாவது மாற்றுக்கருத்து கொடுக்கவேண்டாமா. நாளை நீங்கள் தனிமையில் சுய இன்பம் செய்வதைக்கூட ஒரு திருட்டு செல்போன் பாப்பரசி மூலம் நெட்டில் அரங்கேற்றப்படலாம். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அப்படி ஒருவன் வெளியிட்டால் அவனை நீங்கள் மன்னிப்பீர்கள் என்றால் நீங்கள் அவ்ர்கள் இருவரையும் கண்டியுங்கள்! யேசு சொன்னதுபோல் நிச்சயம் நீங்கள் கல்லெரியலாம்!

2. அவர் துறவி.. முற்றும் துறந்தவர் இப்படி செய்யலாமா என்றால் உங்கள் அறிவின்மை பற்றித்தான் நான் கேள்வியெழுப்பவேண்டும். முதலில் இவர்மாதிரி காசுவாங்கி ஆன்மீகம் சொல்லிக்கொடுக்கும் எல்லா ஆன்மிக வியாபாரிகளுமே ஒரு மயிரையும் துறக்காதவர்கள்! ( அவர்கள் தலையைப்பாருங்கள் விளங்கும்! ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர், நித்யானந்தா எல்லோருக்கும் தலைமுடி துறக்காத ஜடாமுடிகள்! ) அவர்களிடம் உலகெங்கும் ஆயிரம் கோடிக்கணக்கில் பணம் இருக்கையில் அவர்களையெல்லாம் முற்றும் துறந்தவர்கள் என்று நீங்கள் நம்பியிருந்தால் ஒன்று நீங்கள் ஒன்றாம் வகுப்பு மாணவராக இருக்கலாம் அல்லது கீழ்பாக்கம் ஏர்வாடி ந(ண்)பராக இருக்கலாம்! எனவே இந்தப்பார்வையும் உங்கள் மீதான அடிப்படைத் தவறேயன்றி அது அவர்கள் தவறு அல்ல!

3. இந்து மதத்தையே எடுத்துக்கொண்டால் கூட அங்கு பெண்களுடன் புணர்தல், போதை, மது, கஞ்சா அருந்துதல், மாமிசம் (நர) சாப்பிடுதல் கூட தாந்ரா என்ற நிலையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி நான் படிக்கையில் அவர் பிராமணி பைரவி என்ற அம்மையாரின் சீடனாக இச்செயல்களை/சம்பிரதாயங்களை செய்துமுடித்தவர் என்று வருகிறது. எனவே இது ஒன்றும் ஆன்மிகம் இல்லை என்று எப்படி சொல்கிறார்கள்? அது பிராமண தந்திரம்! மாமிசம், மது, போன்றவைகள் சூத்திரர்களுக்கும் அவர்ணதாரிகளுக்கும் என்று இடையில் அவைதிக மதங்களான பௌத்தத்தையும் சமணத்தையும் பார்த்து ஆடிய வான்கோழிகளின் செய்த அயோக்கியத்தனம்! இதன் உட்கருத்தை அறியாமல் பெரியார் அன்பர்களும் அனுமன் சேனா போல களத்தில் இறங்கியது நிச்சயம் கண்டிக்கத்தக்கதே! காமம் கடவுளுக்கே மூலம் என்ற கருத்தை பரப்பிய கொனார்க்கும், கஜூராஹோவும் இருக்கையில் இங்குள்ள அறிவு ஜீவிகள் மௌனம் காத்தது தான் வியப்பானதாக இருந்தது! ( நானும் சாருவைக்கூட சீண்டிப்பார்த்தேன்.. ம்ஹூம்! மௌணம் தான்!) இங்குள்ள சில அறிவு ஜீவிக்களுக்காக ... ஒரு நீண்ட ஆங்கிலக்கட்டுரையை உங்களுக்குத்தருகிறேன்.

Expectations of Khajuraho

Just like people's perception of Taj Mahal changes after seeing it in reality, the feeling one gets at the Khajuraho temples is totally different from one's expectation. The beauty is in the eyes of the beholder and the same object may appear differently to different people. A maiden may appear as a mother to Ramakrishna Paramahamsa, as a sister to Swamy Vivekananda, as a daughter to an elderly person and as a lover to a romantic. I was interested in finding out what most people felt about these erotic sculptures, and observed them from a vantage point in Khajuraho, Madhya Pradesh. As they rested under a tree, a Tamilian couple regretted having come all the way and having ignored their own temples. A Bengali couple complained about the tourism brochure they had seen to take this trip. Apparently the brochure had close-ups of only the best sculptures. A Maharashtrian family seemed to think that the higher they went, the better the sculptures, and spent most of their time climbing up and down.

A well-equipped frequenter of horse races pulled out his binoculars but was disappointed that the additional lens did not help improve the visual quality of the sculpture. A family man from Andhra spent all his time attending to his young children and eating the food that his wife distributed, as if the sculptures did not matter. The leader of a gang of youngsters, to preempt the disappointments of his friends, explained, "Our ancestors were very virile; they had to have sex several times a night. If they couldn't find many women they enjoyed the same partner in several positions. These sculptures were erected for their benefit."

A Frenchman and his daughter looked as if they were solving a mysterious problem and analyzed every sculpture in the ultimate detail. Sometimes they argued before agreeing. A newly wed American couple wondered about the advances the Indians had made in the 10th century. The young man must have whispered "Just as we tried the Indian curry, why not try an Indian position?" The couple laughed naughtily and went on to the next temple.

Hundreds of others came, saw the sculptures, passed their own judgments, and left. But none seemed to be excited by looking at them. They all seemed disappointed that the eroticism they had expected was missing. Travel brochures and exaggerated publicity are responsible for this. The travel guides too seemed to exaggerate the sculpture and regularly cooked up stories in order to extract tips. No wonder that those who come here expecting a Las Vegas will be disappointed, because there is only pure beauty and no perversion in these temples. Creations such as a cabaret or pornography, which are designed to excite human sexuality, are absent here. Even the magnetism of a curvaceous female body is missing from these sculptures. Just as we do not think of sex when seeing the image of a half clad Laxmi (a.k.a. Lakshmi ) or Saraswati (Hindu deities), we cannot think of sex at these temples.

Eternal Lovers
Eternal Lovers, Khajuraho

Why Erotica in Temples?

There are different opinions on why temples were decorated with sexually explicit sculptures. One group argues that the old kings lived in obscene luxury and that they used these for excitement. Another group thinks that it was part of sexual education in ancient India: since most people visited temples, it was an appropriate place for mass communication. Some scholars say that since Hinduism believes in the efficacy of all four paths to Moksha (Dharma, Artha, Yoga, and Kama), these sculptures were provided to assist in the last of these four paths. Since these sculptures are limited to the outer walls of the temples, some people interpret them as a symbolic gate to reaching God. It is possible that at the time just preceding the construction of these sculptures, monastic Buddhism was prevalent, people were losing interest in the householder-life, and the temples were built to attract people to sex and family life and to renew Hinduism.

Some others go to the extent of saying that the Khajuraho temples themselves are built upon the model of an ultimate seductress. The steps are like the feet, the Ardhmandapam are the knees, the Mandapam represents the curvaceous thighs, the sanctum-sanctorum is like the ovaries, and since it is very dark where the Linga is installed, it represents the sexual organ, etc. For a long time, the pundits have wondered why it was necessary to decorate a place of worship with sexual material, but if one observes the materialistic (Loukika) thoughts of Hinduism, there is nothing unnatural about them.

Why Not?

How can the Indians criticize the Mithuna (mating) sculptures while worshiping Mahadev (Shiva) as a symbol of male and female organs? "All of life is God's magic;" we are all parts of divinity; our scriptures argue that to attain moksha, and to dedicate ourselves to dharma and adhyatma, we should first experience sexual fulfillment. The one who wrote the Kamasutra was none less than a sage! When the Gods themselves cannot escape the web of erotic love (Kama), what about us mere mortals? We have saints and mystic figures (Purana-Purusha) who have sinned, we have sages who have abandoned their years of renouncement for a beautiful woman, we have deities who have slept with others' wives, we have those who have fathered deer, we have those who have made love to and deceived even the Sun God, and we certainly have those who have conceived before marriage. If one were to make a list of these incidents that appear in Hindu scriptures, one could put western societies to shame. If one concedes that sex is an important and integral part of life, mortals must experience it completely. Only perversions are excluded.

4. அதுசரி.. அவர்கள் இருவரும் ஆலிங்கனம் செய்துகொண்டால் உங்களுக்கும் எனக்கும் ஏன் கோபமோ, ஆச்சர்யமோ, அசூயையோ வரவேண்டும்? அவர்கள் அப்படி படுத்த அடுத்த நிமிடம் உலகம் நடுங்கியதா? பெட்ரோல் விலை எகிறியதா? சமாதானத்துக்கு பங்கம் நிகழ்ந்துவிட்டதா என்றால் ஒரு வெங்காயமும் இல்லை! நடக்கவும் வாய்ப்பில்லை! உங்கள் அரை(றை)குறை ஒழுக்க மதிப்பீடுகள் வேண்டுமானால் அதிர்வுக்குள்ளாகியிருக்கலாம்.. அதுவும் நீங்கள் பிரேமானந்தாக்கள் இன்றும் ”என்னடா ராஜா” என்று சிரித்து பேட்டிகொடுப்பதை அறியாத அப்பாவியாகவிருந்தால்!

5, என்னைப் பொருத்தவரை இருவரது அழகான அந்தரங்கத்தை பொதுவில் வைக்கும் மீடியாக்கள் தான் அசிங்கம் பிடித்தவர்கள். ஒரு குக்கி இணையத்தில் நான் மேய்வதை மோப்பம் பிடித்தாலே வெறுக்கும் இன்றைய நவீன இணைய இளைஞர்கள், ப்ரைவசி அட்வகேட்கள் எல்லாம் ஏன் இந்த விடயத்தில் அடக்கிவாசிக்கிறார்கள் என்று எனக்கு இன்னும் புரிபடவில்லை! இணையம் போன்ற நவீன மாற்று ஊடகங்களே அமைதிகாக்கையில் பழைய ஊடகங்களைப்பற்றி சொல்லவா வேண்டும். அவர்கள் அடுத்தவன் விந்தை நக்கிப்பிழைக்கும் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றுகிறார்கள் !

ஆப் த ரெக்கார்டு: ரஞ்சிதா மாதிரி அழகான ஒரு பெண்ணை ஒரு சாமியார் அனுபவிக்கிறானே என்ற பொச்சறிப்பை ஜட்டிக்குள் மறைத்து பொதுஜனங்கள் பொங்கியெழுவதை என்னால் நிச்சயம் புரிந்துகொள்ளமுடிகிறது!

டிஸ்கி: இதையெல்லாம் எழுதியதால் செல்லா ஏதோ இந்த சாமியாரின் சீடன் என்று நீங்கள் நினைத்தால் எப்படி உங்கள் சுய இன்பம் உங்கள் சார்ந்த விசயம் என்று நான் ஒத்துக்கொள்கிறேனோ அதேபோல இதுவும் உங்கள் சொந்த அறிவின்மை சார்ந்த வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ளவே செய்வேன்! வேறு வழி?

Blog Widget by LinkWithin

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு